உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டனில் ராபர்ட் கிளைவ் சிலையை அகற்றுணும்; பிரிட்டனில் முன்னாள் எம்பி வலியுறுத்தல்

லண்டனில் ராபர்ட் கிளைவ் சிலையை அகற்றுணும்; பிரிட்டனில் முன்னாள் எம்பி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்த ராபர்ட் கிளைவின் சிலையை இடித்து அகற்ற வேண்டும் என தொழிலாளர் கட்சியின் முன்னாள் எம்பி டெபோனிர் கோரியுள்ளார்.பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி, இந்தியாவில் நிலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ராபர்ட் கிளைவ். அவர், பல கொடூர செயல்களை செய்து, இந்தியர்களை துன்புறுத்திய சம்பவங்கள், ஆவணங்களில் பதிவாகியுள்ளன.அத்தகைய கொடூர பின்னணி கொண்ட நபரின் சிலை, லண்டனில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் முன்பாக உள்ளது. 1912ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த சிலையை அகற்ற வேண்டும் என்று, தொழிலாளர் கட்சியின் முன்னாள் எம்.பி.,யும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான பரோனேஸ் டெபோனிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்திய-இலங்கை வம்சாவளியை சேர்ந்த தந்தைக்கும், பிரிட்டனை சேர்ந்த தாய்க்கும் பிறந்த டெபோனிர், பிரிஸ்டல் தொகுதியில் எம்.பி.,யாக இருந்தவர். அவர் கூறியதாவது: இந்தியாவை நாகரிகம் மிக்கதாக பிரிட்டன் மாற்றியதாக இன்னும் பேசிக்கொண்டிருப்பது எந்த வகையிலும் உதவாது. 17ம் நுாற்றாண்டில் இந்தியாவில் இன்ஜினியரிங் தொழில் துறைகள் சிறப்பாக வளர்ந்திருந்தன. கனிமங்களை பிரித்தெடுப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். நம்ப முடியாத பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தன.இப்போதைய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு முன்னதாக, அவர்கள் தடையற்ற வர்த்தகம் செய்தனர். அனைத்தும், காலனி ஆட்சியால் மூடப்பட்டன. அத்தகைய ஆட்சிக்கு அடித்தளம் அமைத்த கிளைவ் சிலையை மக்கள் மகிழ்ச்சியுடன் பார்ப்பது போல் அமைத்துள்ளனர். இது, வரலாற்று பூர்வமாக சரியானதல்ல. இந்தியாவுடன் தற்போதைய உறவுகளுக்கு இந்த சிலை எந்த வகையிலும் உதவாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.ராபர்ட் கிளைவின் மார்பிள் சிலை ஒன்று, இன்னும் கோல்கட்டாவில் இருக்கிறது. பிரிட்டனில் ஸ்ரூஸ்பரி நகரில், ராபர்ட் கிளைவின் இன்னொரு சிலையும் இருக்கிறது. அந்த சிலையை அகற்ற வேண்டும் என்றும், அகற்றக்கூடாது என்றும், 2020ல் இரு வேறு தரப்பினர் அரசுக்கு மனு கொடுத்தனர். ஆனால், உள்ளூர் நகராட்சி நிர்வாகம், அந்த சிலையை அப்படியே வைத்திருக்க முடிவு செய்தது.ஆனால், அதற்கு பக்கத்தில், 'கிழக்கிந்திய கம்பெனி சார்பிலான ராபர்ட் கிளைவின் செயல்பாடுகள், இந்தியாவை கொள்ளையடிப்பதாக இருந்தன. அவரும், கம்பெனியும் இந்தியாவில் பஞ்சம், வறுமையை ஏற்படுத்தினர். குடிமக்களை துன்புறுத்தினர்' என்று தெரிவிக்கும் பலகையை நிறுவி விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தத்வமசி
ஆக 13, 2025 19:03

தனது சொந்த சரிதத்தை, பண்பாட்டை, வெற்றிகளை மறைத்து அல்லது மறந்து அடிமையாக வாழ்ந்த நாட்களின் கதையை மாணவர்களுக்கு பெரும் மதிப்புடன் கற்றுத் தரும் நமது பாடத்திட்டத்தை முதலில் ஒழிக்க வேண்டும். எந்த நாடும் தனது அடிமை வரலாற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில்லை. ஆனால் எட்டப்பர்கள் வாழும் நாட்டில் அதையே பிடித்து தொங்குகிறார்கள். மகாபாரதத்தில் தர்மபுத்திரர் சொல்லுவார் "நமக்குள் சண்டை என்றால் நாம் ஐவர் - கௌரவர்கள் நூறு பேர்" மற்றவர்கள் நம்மை தாக்கினால் நாம் நூற்று ஐந்து பேர் என்று தம்பிகளிடம் கூறுவார். ஏனோ இந்திய வரலாற்றுப் பாடத்தை எழுதிய பல மரமண்டைகளுக்கு தெரியவில்லை.


Amsi Ramesh
ஆக 13, 2025 17:25

இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் எண்டவரின் சிலை தமிழ்நாடு முழுவது இருக்கு - வரலாறு முக்கியம்


M Ramachandran
ஆக 13, 2025 17:10

இந்த செய்தியை யாராவது அவரின் ஜால்ரா ப.சி படித்து காட்டலாமெ. இந்தியா இப்போ காமாண்டிங் சீட்டில் உட்கார்ந்திருப்பது பப்புவின் அறிவிற்கு எட்டும்


M Ramachandran
ஆக 13, 2025 17:07

பேஷ் உலகம் மாறி கொண்டு தான் வருகிறது என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது. பழைய காலங்களில் ஊடக முனேற்றம் இன்ரிப்பது போல் இல்லை. சரியான தகவலும் இங்கிலாந்து அரசுக்கு போய் சேரவும் சேராது. சில சமயம் கொடுமைகள் பற்றி அறிந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். அதனால் தான் ராபர்ட் கிளைவ் செய்த அட்டுளியங்கள் பார்வைக்கு வர வில்லை. அதே ராபர்ட் கிளைவ் சமயபுரம் மாரியம்மனை எளிதாக நினைத்து கேலி செய்ய அந்த ஆங்கிலேயணை தன்னையார் என்று உணர செய்து மண்டி இட வைத்தாள் அம்மன். அந்த நிலையய் இண்ரைக்கும் திருட்டு திரவிட தலைவன் ஸ் டாலின் கும்பலால். அண்னை கண்ண திறப்பாளா?


அப்பாவி
ஆக 13, 2025 16:52

அப்போலேருந்து கொள்ளையடிச்ச பணத்தையும் திருப்பி குடுக்கச் சொல்லுங்க மேடம். ஒரு 30, 40 டிரில்லியன் டாலர் தேறும்.


அப்பாவி
ஆக 13, 2025 16:51

திருச்சில க்ளைவ்ஸ் ஹாஸ்டல் இருக்கு...


என்றும் இந்தியன்
ஆக 13, 2025 16:38

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான பரோனேஸ் டெபோனிர் ????ராபர்ட் கிளைவ் முதல் கருணாநிதி சிலை வரை பலவற்றை அகற்றவேண்டும் தான் இந்தியாவில்


KRISHNAN R
ஆக 13, 2025 16:36

Yes


Mettai* Tamil
ஆக 13, 2025 14:58

கல்கத்தா ,லண்டனில் இருக்கும் ராபர்ட் கிளைவ் சிலையை அகற்றுணும்.....


ManiMurugan Murugan
ஆக 13, 2025 14:56

அப்படிப் பார்த்தால் தமிழகத்தில் பல சிலைகள் அகற்ற வேண்டும் உண்மையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள் சிலைகள் இல்லை மக்கள் வரி ப்பணத்தை சுரண்டியவர்கள் சிலைகள் தான் உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை