உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காஷ்மீர் தாக்குதல்: பாக்., ராணுவம், ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்

காஷ்மீர் தாக்குதல்: பாக்., ராணுவம், ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்

புதுடில்லி : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்.ஐ., சதி (பாக்., உளவு அமைப்பு) மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகள், பாக்., ராணுவத்தினர் தொடர்பு அம்பலம் ஆகி உள்ளது. தேசிய புலனாய்வு படையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் படுகொலை தொடர்பாக தேசிய புலனாய்வு படையினர் (என்.ஐ.ஏ.,) அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐ., மற்றும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தான் இதில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவமும் பின்புலத்தில் இருந்து உதவி புரிந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7cnezj79&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நடத்திய முதற்கட்ட விசாரணை அறிக்கை விபரம் கசிந்துள்ளது. ஆரம்ப அறிக்கை பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியாகியுள்ளது. இதன்படி, இந்த தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா, ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.இந்த தாக்குதல் ஐ.எஸ்.ஐ.யின் உத்தரவின் பேரில் பாகிஸ்தானில் உள்ள ராணுவ தலைமையகத்தில் சதி திட்டமிடப்பட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (POK) சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உள்ளூர்வாசிகள் உதவி

பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் தொடர்பில் இருந்தனர். பாகிஸ்தானிடமிருந்து வழிகாட்டுதலையும் நிதியையும் பெற்றுள்ளனர். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பாக்., ஆக்கிரமிப்பு கார்மீர் பகுதியை சேர்ந்தவர்கள். முக்கிய பயங்கரவாதிகள் ஹாஷிம் மூசா மற்றும் அலி என்கிற தல்ஹா பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள். இருவருக்கும் காஷ்மீரில் வசிக்கும் அடில் அஹம்மது தோகர் என்பவர் உதவியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு தளவாடம் வழங்குதல், தகவல், திரட்டி கொடுத்தல், உள்ளூர் பகுதிகள் குறித்த அடையாளம் தெரிவித்தல் மற்றும் பதுங்கு இடங்கள் உள்ளிட்டவற்றை உள்ளூர்வாசிகள்தான் வழங்கியுள்ளனர்.

ஒரு வாரம் முன்னதாக வந்தனர்

மேலும் தாக்குதல் நடப்பதற்கு முன் ஒரு வாரம் முன்னதாக இந்த பகுதிக்கு அவர்கள் வந்துள்ளனர். பஹல்காம் பகுதியில் 2 நாட்கள் நோட்டமிட்டுள்ளனர்.பஹல்காமில் 2,800 பேரிடம் நடத்திய விசாரணையில் 150க்கும் மேற்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல மதவாத அமைப்பினர் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உதவியவர் களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான நிர்வாக மற்றும் சட்ட நடவடிக்கைககள் துவங்கியுள்ளது. பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் உட்பட தடயவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டன. இது தடய அறிவியல் ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குப்வாரா, புல்வாமா, சோப்பூர், அனந்த்நாக், பாரமுல்லா உள்ளிட்ட பல மாவட்டங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பல நபர்களின் வீடுகள் சோதனை செய்யப்பட்டன.

விமான கடத்தல்காரன்

1999ம் ஆண்டு ஐசி-814 விமானக் கடத்தல் வழக்கில் முக்கிய நபராகவும், தற்போது பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதாக கூறப்படும் முஷ்டாக் அகமது ஷர்கரின் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஸ்ரீநகரில் உள்ள ஷர்கரின் வீடு 2023ம் ஆண்டில் சட்டவிரோத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் சீல் வைக்கப்பட்டது.தேசிய புலனாய்வு படை இயக்குநர் ஜெனரல் (DG) தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும். பின்னர் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் ஆதாரங்களை வழங்கப்படும். தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

India our pride
மே 02, 2025 20:36

அவனுக டிசைனே அப்படித்தான். வருபவனை எல்லாம் பெண்களால் சுட செய்து உடலை எரித்தால் மட்டுமே இந்த சம்பவங்கள் குறையும்.


Nagarajan S
மே 02, 2025 17:41

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் எந்த நாட்டின் மீதும் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. உடனடியாக POK இல் உள்ள பயங்கர வாதிகளின் முகாம்களை கூண்டோடு அழிக்கவேண்டும்.


thehindu
மே 02, 2025 16:52

இதைத்தான் ஐம்பது ஆண்டுகளாக கூறிக்கொண்டுள்ளார்கள் . அரைத்த மாவையே அரைத்துக்கொண்டுள்ளார்கள். ஒரு புண்ணியமும் கிடைக்கவில்லை ஒருமாற்றமும் கிடைக்கவில்லை . டிரில்லியன் டாலர்கள் இழந்த பிறகும் இதே நிலை


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 02, 2025 17:39

மேற்குலகால் தூண்டப்பட்டுதான் இத்தனையும் செய்தோம் என்று அவர்கள் கூறவில்லையா ?? நீயும் உன் தொப்பிள்கொடி உறவுகளுடன் சென்று சேர்ந்துவிடு .....


என்றும் இந்தியன்
மே 02, 2025 16:46

பாகிஸ்தானின் துணை இல்லாமல் ஆதரவு இல்லாமல் உதவி இல்லாமல் இந்த மாதிரி பயங்கரவாத நிகழ்ச்சி நடத்த முடியவே முடையாது "தவறு கண்டேன் சுட்டேன் குற்றம் செய்தவர்களை குற்றம் செய்தவர்களுக்கு உதவியவர்களை குற்றம் செய்ய வழிகாட்டியவர்களை " இந்த ஒரே ஒரு ஆணை சட்டம் தான் இப்படி இன்னொரு கடவை இந்த நிகழ்ச்சி நடக்காமல் இருக்க வைக்கும்.


Kasimani Baskaran
மே 02, 2025 16:29

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை முழுவதுமாக அடித்து உடைத்து சமன் செய்து இந்தியர்களை சிறுபான்மையல்லாதவர்களை குடியமர்த்த வேண்டும். இல்லை என்றால் இதற்க்கெல்லாம் தீர்வு கிடையாது.


Barakat Ali
மே 02, 2025 16:08

பஹ்ருதீன் நான் உங்க கருத்தைத் தாமதமாகப் பார்த்தேன் .. நான் பொதுவாக என்று குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களைத்தான் மேற்கோள் காட்டியுள்ளேன். அன்றாட தஹ்மீத் பற்றிக் குறிப்பிடவில்லை. வரைமுறையின்றி மார்க்கத்துக்கு எதிரான கொலை போன்ற செயல்களில், அதுவும் அப்பாவி குடிமக்கள் - ராணுவத்தினர் கூட அல்லர் - இறைவனை இழுப்பதே ஹராம் என்று நீங்கள் கூட உணரலாம் ....


Thangavel
மே 02, 2025 14:59

கண்டுபிடித்த ஆதாரங்களின் அடிப்படையில் அவனுகள பொளந்துட்டு அப்புறம் ஒங்க ஆதாரத்தை ஐ நா வுக்கு கொடுங்க... இல்லன்னா காலத்துக்கும் நாம ஆதாரத்தை கொடுத்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்..!!!!


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 02, 2025 16:22

எவனுங்களை ன்னு சொல்லணும். ஆளை சொன்னா பொளந்துடலாம்தான். ஒரு தீவிரவாத குழுவுக்கு தொடர்பு உள்ளதுன்னு பல உயிர்களை பலி கொடுத்த பத்துநாளைக்குப்பின் கண்டு பிடிச்சிட்டாங்க.


நிக்கோல்தாம்சன்
மே 02, 2025 13:50

கல்லில் கட்டி ஜீலம் நதியில் போட்டுவிடுங்க


Sudha
மே 02, 2025 13:48

இந்த கண்டுபிடிப்புகள் போதும், இனி செயலில் இறங்க வேண்டும். பாக் அரசுக்கு முக்கிய 5 அம்ச நிபந்தனை விதிக்க வேண்டும். அது வராத பட்சத்தில் தாக்குதல் துவங்கும்


sundarsvpr
மே 02, 2025 13:29

தேசிய புலனாய்வு துறை முயற்சிகள் ஒருபக்கம் நடந்தாலும் பாகிஸ்தான் அரசு நேரிடையாக பங்கு ஏற்காது. தற்போதைய நரேந்திரன் அமித் ஜா ராம்நாத் சிங் கூட்டு அணுகுமுறையை தடுக்க சதித்திட்டம் என்ற நோக்கில் பார்வை இருக்க வேண்டும். இதனை மக்களால் மட்டும் செய்திட இயலும். வெளிநாட்டு சதி என்ற நோக்கில் என்பதனைவிட உள்நாட்டில் ஜனநாயக போர்வையில் குந்தகம் செய்திடும் அரசியல் கட்சிகளை கண்காணித்தல் மிக அவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை