உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புதிய தேசத்தை உருவாக்குவோம் : வீடியோ வெளியிட்டு பேகம் கலிதா ஜியா உரை

புதிய தேசத்தை உருவாக்குவோம் : வீடியோ வெளியிட்டு பேகம் கலிதா ஜியா உரை

டாக்கா: வளமான புதிய வங்கதேசத்தை உருவாக்குவோம் என முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.மாணவர் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளயடுத்து வங்கதேச பார்லிமென்டை கலைக்கப் பட்டது. முகமது யூனுஸ் தலைமையில் நாளை( ஆக.,8) இடைக்கால அரசு அமைக்க உள்ளதாக ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.இந்நிலையில் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவை விடுதலை செய்ய அதிபர் முகமது ஷகாபுதீன் உத்தரவிட்டதையடுத்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு கலிதா ஜியா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது அதில் கூறியுள்ளதாவது,வீரமும், துணிச்சலும் மிக்க நம் இளைஞர்களால் நாடு விடுதலை அடைந்துள்ளது. எனது உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நாடு புதிய தொடக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலால் சிதைந்து போன ஜனநாயகத்தை மீட்டு ஒரு புதிய வளமான வங்காளதேசத்தை உருவாக்குவோம்.முடியாததை முடித்துக்காட்டிய துணிச்சல் மிக்க இளைஞர்களுக்கும், இதற்காக உயிர்நீத்த தியாகிகளுக்கும் தலை வணங்குகிறேன்.இவ்வாறு அந்த வீடியோவில் கலிதா ஜியா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

R.Varadarajan
ஆக 09, 2024 02:23

இவளும் ஒரு உதவாக்ககரை , இவளையும் உளளே வைக்கவேண்டும். வங்கதளச மக்கள நன்றி மறந்தவர்கள். இவர்களுக்கு பக்கிகளிடமிருந்து விடைதலை பெற்றுத்தர இந்திய மக்கள் செயத தியாகங்களை மறந்து இன்றும் முதுகில் குத்திக்கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு விடுதலை கிடைத்தது. இந்திய மக்களுக்கு சனி பிடித்தது. விலையேற்றம், வரி உயர்வு ,, இவர்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப்பண்டங்கள், அத்தி யாஙசியப்பண்டங்களால் இந்திய மக்களுக்கு அவை பற்றாக்குறையானது வரைபக்கிகளுக்கும், இவர்களுக்கும் இந்திய மக்களைப்பொறுத்தவரை என்ன வித்தியாசம் ? துரோகிகள்


Anu Sekhar
ஆக 07, 2024 22:44

மறுபடியும் பாவம் மக்களை வறுமைக்கு தள்ளுங்கள். அங்கேயும் கைக்கூலிகள் தான் . பாக்கிஸ்தான் வங்க தேசத்தை விழுங்க போறது. அது அப்படி இருக்க ராகுல் இந்தியாவையும் தாரை வார்க்க போறது. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.


ஆரூர் ரங்
ஆக 07, 2024 22:15

உங்க ஆசைப்படி பாகிஸ்தானுடன் இணைத்தால் உங்களையும் இம்ரான் கானையும் ஒரே கொட்டடியில் அடைத்து பட்டினி போடுவர் .ஆசையா இருக்கா?


சிந்தனை
ஆக 07, 2024 22:07

ரெண்டு பேருல யாரோ ஒருத்தர் காஃபிர். யாருன்னு தெரியலை...


r ravichandran
ஆக 07, 2024 22:01

ஊழல் குற்றச்சாட்டில் நிரூபணம் ஆகி சிறையில் இருந்தவர் இவர். இவர் ஊழல் குறித்து பேசுவது வேடிக்கை.


ராமகிருஷ்ணன்
ஆக 08, 2024 07:50

தமிழக திமுகவினரின் ஊழல் எதிர்ப்பு போன்றது. நினைத்தாலே அடங்காத சிரிப்பு வருது


Ramesh Sargam
ஆக 07, 2024 21:50

மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேல் இறந்திருக்கிறார்கள். அதைப்பற்றி கொஞ்சம் கூட வருத்தம் தெரிவிக்காமல் பதவியை பிடிப்பதிலேயே இவருக்கு முக்கியம்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 07, 2024 21:50

வங்கதேசத்தின் சசிகலாவோ ????


சுலைமான்
ஆக 07, 2024 21:45

குறும்பி.... குறும்பி..... அப்டியே பிரதமர் பதவிக்கு ஒரு துண்ட போட்ருச்சி பாரு.


HoneyBee
ஆக 07, 2024 21:20

சீக்கிரம் முடித்து வையுங்கள்... இனி பாங்கா செத்தான்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை