உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / யு.ஏ.இ., தேசிய தினத்தில் 1,435 பேரின் ரூ.1,159 கோடி கடன் ரத்து

யு.ஏ.இ., தேசிய தினத்தில் 1,435 பேரின் ரூ.1,159 கோடி கடன் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அபுதாபி: தேசிய தினத்தையொட்டி, 1,435 பேரின், 1,159 கோடி ரூபாய் கடனை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ரத்து செய்துள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேற்று தன், 54வது தேசிய தினத்தைக் கொண்டாடியது. இதையொட்டி நடந்த விழாவில், இந்தியாவின் சார்பில் மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் கலந்து கொண்டார். தேசிய தினத்தையொட்டி, 1,435 மக்களின், 1,159 கோடி ரூபாய் கடன்களை ரத்து செய்வதாக அரசு அறிவித்தது. நாட்டில் உள்ள, 19 வங்கிகள் ஒத்துழைப்புடன் இந்தக் கடன்கள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கையாக, வருவாய் குறைந்தவர்களின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்தோர் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கான கடன்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்களின் நிதி நெருக்கடியைக் குறைத்து, அவர்களுடைய பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ