உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / திருடர்களிடம் இருந்து காரை மீட்ட லண்டன் தம்பதி

திருடர்களிடம் இருந்து காரை மீட்ட லண்டன் தம்பதி

லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனைச் சேர்ந்தவர்கள் மியா போர்ப்ஸ் பிரி மற்றும் மார்க் சிம்ப்சன் தம்பதியினர். இவர்கள் புரூக் க்ரீன் பகுதியில் உள்ள தங்கள் வீட்டின் வெளியே சமீபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'ஜாகுவார் இ - பேஸ்' காரை நிறுத்தி வைத்திருந்தனர்.காலை எழுந்து வந்து பார்த்த போது, வீட்டின் முன் இருந்த கார் திருடிச் செல்லப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசாரின் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவித்தனர். அவர்கள் ஆள் பற்றாக்குறை காரணமாக புகாரை விசாரிக்க நேரமாகும் என கூறினர்.காரில் உள்ள 'ஏர்டேக் லோகேட்டர்' எனும் தொழில்நுட்பத்தின் உதவியுடன், கார் குறித்த தகவல்களை பார்த்தனர். இதையடுத்து தம்பதியினர் தாங்களாகவே ஏர்டேக் லோகேட்டர் காட்டிய இடத்துக்கு சென்றனர்.சில ரகசிய குறியீட்டை செலுத்தினால் மட்டுமே காரை இயக்க முடியும். அதனால், திருடர்கள் காரை தள்ளிச் சென்றுஉள்ளனர். ஒரு கட்டத்தில் அதற்கு மேல் தள்ள முடியாமல், ஒரு இடத்தில் காரை நிறுத்தியுள்ளனர்.அதை தம்பதியினர் மீட்டெடுத்து வந்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை