உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாடு கடத்தும் வழக்கு விக்கிலீக்ஸ் ஜூலியன் அசேஞ்ஜிற்கு லண்டன் ஐகோர்ட் உத்தரவு

நாடு கடத்தும் வழக்கு விக்கிலீக்ஸ் ஜூலியன் அசேஞ்ஜிற்கு லண்டன் ஐகோர்ட் உத்தரவு

லண்டன்: விக்கி லீக்ஸ் இணையதள நிறுவன ஜூலியன் அசேஞ்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் வழக்கில் மேல்முறையீடு செய்ய லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.ஆஸ்திரேலியாவை சேர்ந்த 'விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச்,53 2006ல் 'விக்கி லீக்ஸ்' இணையதளத்தை துவக்கி பல்வேறு நாடுகளில் நடந்த போர் குறித்த பல லட்சம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் அமெரிக்க வெளியுறவு தொடர்பான இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை வெளியிட்ட வழக்கு லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. அவரை நாடு கடத்தி கொண்டு வரும் வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லண்டன உயர்நீதிமன்றத்தில் அசேஞ்ச் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை லண்டன் ஐகோர்ட் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ