| ADDED : ஜூன் 09, 2025 10:32 PM
வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது தொடர்பாக அங்கு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக அதிபர் டிரம்ப் மீது கலிபோர்னியா கவர்னர் வழக்கு தொடர்ந்துள்ளார்அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் மேற்கொண்ட கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.போராட்டத்தை கட்டுப்படுத்த என்.ஜி., எனப்படும் தேசிய காவல் படை போலீசாரை அனுப்பி வைத்து டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.இந்நிலையில் அதிபர் டிரம்ப் அரசின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த கலிபோர்னியா கவர்னர் கவின் நியூஸ்கம் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் போராட்டக்கார்களுக்கு எதிராக 2000 தேசிய காவல் படை போலீசாரை குவித்தது சட்ட விரோதம் என தனது கண்டனத்தை ‛‛எக்ஸ்'' தளத்தில் பதிவேற்றினார். இது வைரலாகி வருகிறது.டிரம்ப் அறிக்கை
தேசிய பாதுகாப்பிற்காகவும், போராட்டத்தை கட்டுப்படுத்திடவும் அங்கு 2000 போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக கலிபோர்னியா கவர்னரும், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரும் செயல்படுகின்றனர். இது சரியானது அல்ல என்றார்.