உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரிய வகை மரபியல் நோயால் லக்சம்பர்க் இளவரசர் மரணம்

அரிய வகை மரபியல் நோயால் லக்சம்பர்க் இளவரசர் மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: லக்சம்பர்க் நாட்டின் இளவரசரான பிரெட்ரிக், அரிய வகை மரபியல் நோய் ஒன்றின் காரணமாக உயிரிழந்து விட்டதாக அவரது தந்தை இளவரசர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.ஐரோப்பாவில் அமைந்துள்ள குட்டி நாடு லக்சம்பர்க். உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. இந்த நாட்டின் இளவரசர் பிரெட்ரிக், அரிய வகை நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இது பற்றி அவரது தந்தையும், இளவரசருமான ராபர்ட் தனது சமூக ஊடகப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். மார்ச் 1ம் தேதி அவர் பாரிசில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரடெரிக், 22, கடந்த 2022ல் அரிய வகை நோய்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் வகையில் போல்க் அறக்கட்டளையை உருவாக்கினார்.அவருக்கு ஏற்பட்ட மரபியல் நோய் காரணமாக மூளை, நரம்புகள், தசைகள் மற்றும் கல்லீரல், கண்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதற்கு சிகிச்சை முறை இதுவரை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சண்முகம்
மார் 11, 2025 12:55

லக்சம்பர்க் என்று ஒரு நாடு. இந்த நாட்டுக்கு ஒரு இளவரசர் உண்டு. அனைவரும் அறிந்திருப்பீர்கள்.


பிரேம்ஜி
மார் 11, 2025 07:23

நம் இளவரசர்கள் சாகாவரம் பெற்றவர்கள்! உழைக்காமல் மக்கள் வரிப்பணத்தில் வசதியாக வாழப்பிறந்நவர்கள்! இவர்கள் ஆட்சி செய்து சாதாரண மக்களை உயிரோடு சாக அடிப்பார்கள்!


Premanathan Sambandam
மார் 10, 2025 21:31

யாராக இருந்தாலும் மரணத்துக்கு தப்ப முடியாது ஆழ்ந்த இரங்கல்


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 10, 2025 20:48

என்னது லக்சம்பர்க் இளவரசரையா ?? சென்னையில ஒண்ணு , தில்லியில் ஒண்ணு ன்னு ரெண்டு இருக்குதுங்க .... ஒரு காட்டு காட்டலாம்ல ??