உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; பிரான்ஸ், பிரிட்டன் ஆதரவு

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; பிரான்ஸ், பிரிட்டன் ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.ஐ.நா., சபையில் 200 நாடுகள் அங்கம் வகித்தாலும், பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றில் 5 நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்கள். மீதமுள்ள 10 நாடுகள், 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும் தற்காலிக உறுப்பினர்கள். நிரந்தர உறுப்பினராக எங்களுக்கும் இடம் தர வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட கால கோரிக்கை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sqgnp3x1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் கூறியதாவது: பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் அளிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது: ஐ.நா.,வை மேலும் திறனுடையதாக மாற்ற வேண்டும். பாதுகாப்பு சபை அதிகளவு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். ஜெர்மனி, ஜப்பான், இந்தியா மற்றும் பிரேசில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலின் பணி முறைகளில் மாற்றம், பெரிய குற்றச் செயல்களில் வீட்டோ உரிமையின் வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Skumar
செப் 28, 2024 13:59

இந்தியாவுக்கு நிரந்தர அங்கீகாரம் தயவு செய்து கொடுக்காதீங்க என்னதான் டிஜிட்டல் இந்தியா இருந்தாலும் எல்லா ஸ்டேட்லையும் ஜாதி வித்தியாசம் பார்க்க தான் செய்றாங்க சக மனிதனை மனிதனை எப்ப பார்க்கிறாங்களோ அப்ப நிரந்தர உறுப்பினர் பதவி குடுங்க


V RAMASWAMY
செப் 27, 2024 15:33

Well done PM ji, Your deeds and activities are so well appreciated in own country and abroad that the so-called opposition alliance INDI should bow their heads in shame and dissolve the alliance.


Kumar Kumzi
செப் 27, 2024 13:49

கேடுகெட்ட தேசத்துரோகி பப்பூவை நாடு கடத்த வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
செப் 27, 2024 13:15

ஏற்கனவே நிரந்தர இடம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் ஆதரவளிக்க வேண்டும் ..... சீனா முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே வருவதால் இப்போதைக்கு வாய்ப்பில்லை ..... சீனாவின் நண்பர் பப்பு சீனாவிடம் இந்த விஷயத்துக்காக பரிந்துரைக்கலாம் .....


MURUGAN N
செப் 27, 2024 13:08

சூப்பர்


kulandai kannan
செப் 27, 2024 12:43

As long as a person like Modi is PM, India will act responsibly in the UN. But what will happen when a coalition of ideology-zero parties comes to power.


Ramesh Sargam
செப் 27, 2024 12:27

இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் பிரான்ஸ், பிரிட்டன் நாட்டு தலைவர்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு தெரிகிறது இந்தியாவைப்பற்றி. ஆனால் இங்கிருந்துகொண்டே இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ராகுல் போன்றவர்களை என்ன செய்வது? நாடு கடத்தவேண்டும்.


hari
செப் 27, 2024 13:14

200 ரூபாய் கொத்தடிமைகளுக்கு நாம் கவலை படவேண்டாம் நண்பரே.... எதோ குறைக்கிறது என்று ஒதுக்கி தள்ளுவோம்


புதிய வீடியோ