உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறை மாலத்தீவில் அறிமுகம்

யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறை மாலத்தீவில் அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாலே: இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையான யு.பி.ஐ., வசதி மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யு.பி.ஐ., வசதி உள்ளது.இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளிநாடுகளிலும் யு.பி.ஐ., மூலம் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், யு.பி.ஐ., தொடர்பாக இந்தியா - மாலத்தீவு இடையே கடந்த ஆகஸ்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து தற்போது அந்நாட்டில் யு.பி.ஐ., அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாலத்தீவு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் யு.பி.ஐ., குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும். விரைவான பணப் பரிவர்த்தனை, வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை இதன்மூலம் சாத்தியமாகும் என நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுவரை, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யு.பி.ஐ., மூலம் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
அக் 22, 2024 12:29

அருமை, குருவிகளுக்கு இனி வேலை இல்லை, மேலும் முக்கிய பிரமுகர்கள் வாங்கும் லஞ்சம் இனி பண வர்தனை முறையில் பரிமாறிக்கொள்ளலாம், எந்த தவறு செய்தாலும் அதற்க்கு வரி கட்டிவிட்டால் போதும் என்ற சட்டம் இருப்பதால், பாதுகாப்பு மிக்கது . தயவு செய்து துக்ளக் படத்தில் வரும் வசனங்களை நினைவுகூர வேண்டும், லஞ்சத்துக்கும் ரசீது வழங்கவேண்டும், எந்த எந்த வேலைக்கு எவ்வளவு என்று வெளிப்படையாகவே போர்ட் வைக்கப்படும் என்று அன்றே கூறியிருக்கிறார் திரு சோ அவர்கள், எத்தினை கோடி இன்பம் வைத்தாய் இறைவா, அதை மக்களுக்கு கொடுத்திருந்தால் உன்னை பாராட்டுவார்கள் ஆனால், வந்தே மாதரம்


Narayanan Sa
அக் 22, 2024 12:21

யூபிஇ மற்ற நாடுகளில் இந்தியா மூலம் பிரபலமாகிறது என்பது நமக்கு கிடைத்த பெருமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை