உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்தார் மனு பாகர்: பிரதமர் மோடி வாழ்த்து

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்தார் மனு பாகர்: பிரதமர் மோடி வாழ்த்து

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாகர் வெண்கலம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெண்கலம் ஆகும்.முதல் பதக்கத்தை வென்ற மனு பாகருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ffdwvfku&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியாவின் மனு பாகர் பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய மனு பாகர், 221.7 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இது, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது. தவிர இவர், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார்.12 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக லண்டன் ஒலிம்பிக்கில் (2012) இந்திய வீரர் ககன் நரங் (10 மீ., 'ஏர் ரைபிள்') பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். இது, ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த 5வது பதக்கம். இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் கிடைத்துள்ளன.முதலிரண்டு இடங்களை தென் கொரியாவின் ஓ யே ஜின் (243.2 புள்ளி), கிம் யேஜி (241.3) கைப்பற்றினர்.

பிரதமர் மோடி வாழ்த்து

பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் மனு பாகர் இந்தியாவின் முதல் பதக்கத்தை (வெண்கலம்) வென்றதற்காக வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குவிகிறது பாராட்டு

* ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாகரின் சாதனை பெண்களையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டியுள்ளார்.* ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை மனு பாகருக்கு வாழ்த்துக்கள். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என காங்., எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.* ஹரியானாவின் வலிமையான மங்கை மனு பாகர் நாட்டையும், மாநிலத்தையும் பெருமைப்படுத்திவிட்டார் என முதல்வர் நயாப் சிங் தெரிவித்துள்ளார்.

சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாகரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

வாசகர்
ஜூலை 29, 2024 14:51

ஒலிம்பிக் தொடங்கிய மூன்றாவது நாளிலேயே இந்தியாவிற்கு பதக்கம். இது வரை இல்லாத நிகழ்வு. ஏன்? எவ்வாறு, திறமையானவர்களை நேர்மையாக தேர்வு செய்து, தகுந்த பயிற்சி கொடுத்ததால் மட்டுமே. நேர்மை, ஊழல்வாதிகளாள் மறக்கடிப்பட்ட வார்த்தை. காசு வாங்கி ஒட்டு போடும் மக்களுக்கும் இந்த நேர்மை வார்த்தை கேள்விப்படாத ஒன்று தான்.


Apposthalan samlin
ஜூலை 29, 2024 09:53

வாழ்த்துக்கள் எப்பொழுது நாம் முதல் பத்து இடங்களில் வருவோம்? மக்கள் தொகையில் முதலில் இருக்கிறோம் ஏன் மெடல் வாங்க மாட்டேங்கிறோம் ?


Kasimani Baskaran
ஜூலை 29, 2024 05:45

பாரதத்தாய்க்கு முதல் பதக்கம் வாங்கிக்கொடுத்த மனு பாகர்க்கு வாழ்த்துகள்.


KANTHI
ஜூலை 29, 2024 00:56

வாழ்த்துக்கள் சகோதரி. நீடுழி வாழ்க.


RAJ
ஜூலை 28, 2024 22:47

வாழ்த்துக்கள் சகோதரி..


Chinnathambi venka
ஜூலை 28, 2024 21:10

தத்தார் பானூ தந்தார் பதக்கம்.. வாழ்த்துக்கள்???


Easwar Kamal
ஜூலை 28, 2024 20:00

கிடையதும் என்ன பயன். இன்னும் பல கிரிமினல்கள் மோடி அமைச்சரவையில் உள்ளனர். எவனாவது காம லீலைகள் செய்ய முற்படும்போது இந்த பதக்கத்தை தூக்கி எறிவார். இதுதானே 10 அந்து காலமக நடக்குது இந்தியாவில்.


Mohan
ஜூலை 29, 2024 09:35

அட என்னப்பா உங்க திராவிட நாட்டுல இருந்து எதாவது வாங்குவாங்களா. அப்போ தூங்கிட்டு முட்டு குடுக்க வருவே ...வாழ்த்தணும் அப்டி இல்லாட்டி கம்முனு இருக்கணும் ... பொறுஞ்சு தள்ளக்கூடாது ..இந்தியாவுக்கான பெருமையா கருதணும் மொதல்ல இந்தியா அப்ரம தான் தமிழன் தெலுங்கன் எல்லாமே அரசியல் செய்ய இடமா இது


jaya
ஜூலை 29, 2024 10:38

சில்லறை


Svs Yaadum oore
ஜூலை 28, 2024 19:19

திராவிட மாடல் மட்டும் இல்லையென்றால் இவரெல்லாம் ப ஜா க ஆளும் மாநிலத்திருந்து சென்று ஒலிம்பிக் பதக்கம் வாங்க முடியுமா ??...


அ. முத்துக் குமார்
ஜூலை 28, 2024 19:03

வாழ்த்துக்கள் சகோதரி ஜெய் ஹிந்த்


Ambika. K
ஜூலை 28, 2024 18:31

60 வருட காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவிற்கு கிடைத்த பதக்கங்கள் எல்லாம் ஹாக்கி யில மட்டுமே. அதுவும் 1980 க்கு பிறகு அதுவும் சந்தேகமே. வெல் டன் பிஜேபி மோடி ஆட்சி.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை