உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விண்வெளி சுற்றுலா செல்லும் முதல் இந்தியர் கோபி

விண்வெளி சுற்றுலா செல்லும் முதல் இந்தியர் கோபி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த கோபி தொடக்குரா விண்வெளிக்கு சுற்றுலா செல்ல உள்ளார். இதன் மூலம் விண்வெளி சுற்றுலா செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்து உள்ளது.30 வயதாகும் கோபி தொடக்குரா, விஜயவாடாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அட்லாண்டா நகரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், புளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் -25 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல தேர்வாகி உள்ளார். அவருடன் 5 பேர் சுற்றுலா செல்ல உள்ளனர். கோபி தொடக்குரா ஏரோநாட்டிகல் அறிவியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர், விமானம் இயக்குவதற்கும் பயிற்சி பெற்றுள்ளார். இதன் மூலம் விண்வெளி சுற்றுலா செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்து உள்ளது. கோபி தொடக்குரா எப்போது விண்வெளிக்கு செல்ல உள்ளார் என்ற தேதி உள்ளிட்ட விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ