உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காங்கோவில் கனிம சுரங்க விபத்து: இடிபாடுகளில் சிக்கி 200 பேர் பலியான சோகம்!

காங்கோவில் கனிம சுரங்க விபத்து: இடிபாடுகளில் சிக்கி 200 பேர் பலியான சோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கின்ஷாஷா: காங்கோவில், கனிம சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் ருபாயாவில், கோல்டான் கனிம சுரங்கம் உள்ளது. 'எம் 23' என்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுரங்கத்தில் இருந்தே, 'டான்டலம்' என்ற அரிய உலோகம் வெட்டி எடுக்கப்படுகிறது. வெப்பத்தை தாங்கும் இந்த உலோகம் ஸ்மார்ட் போன், கணினி, விமான இயந்திரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 28ல், கனமழை காரணமாக கோல்டான் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் பல பகுதிகள் திடீரென இடிந்து விழுந்தன. அப்போது அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள், அருகில் இருந்தவர்கள் என ஏராளமானவர்கள் மண்ணில் புதைந்தனர். இடிபாடுகளில் சிக்கி, 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகி இருப்பதால் பலி அதிகரிக்கக்கூடும் என, அஞ்சப்படுகிறது. இந்த சுரங்க விபத்து காங்கோவை உலுக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ramesh
பிப் 01, 2026 12:01

மிக பெரிய உயிரிழப்பு சோகம் .அந்த குடும்பங்களுக்கு எதனாலும் ஈடு செய்ய முடியாது .


உமா மகேஸ்வரி தூத்துக்குடி
பிப் 01, 2026 08:23

200 பேர் குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றுவிடும். குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால் அந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது பற்றி தெரியாது அந்த பலனை அணிவித்து அந்த சிட்டுவேஷனை சமாளித்தவர்களுக்கு தான் வேதனை புரியும்


தங்கமணி கரூர்
பிப் 01, 2026 08:22

உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை