வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்து கோவில் தாக்குதல் கனனிடியன் அரசாங்கத்தின் ஏற்பாடு
கான்பெரா, 'கனடாவில் உள்ள ஹிந்து கோவிலில், பக்தர்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல், அங்குள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு அரசியல் ரீதியில் அளிக்கப்பட்டுள்ள ஆதரவையே காட்டுகிறது,'' என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தொடர்பான விவகாரத்தில், வட அமெரிக்க நாடான கனடா மற்றும் நம் நாட்டுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து கோவிலில், பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர்.இதற்கு, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியும், 'இந்த விவகாரத்தில், கனடாவிடம் இருந்து நியாயத்தை எதிர்பார்க்கிறோம்' என்று கூறியிருந்தார்.இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு நடந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் கூறியதாவது:கனடாவுடான உறவில் மூன்று முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. முதலில், எவ்வித ஆதாரங்களும் அளிக்காமல் இந்தியா மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறியது. அடுத்தது, அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகள் கண்காணிக்கப்படுவது ஏற்புடையதல்ல.தற்போது கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதலும் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதிலிருந்து, பயங்கரவாதத்தில் ஈடுபட்ட பிரிவினைவாத அமைப்புக்கு அங்கு அரசியல் ரீதியில் ஆதரவு அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்த நாட்டின் துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங்கை நேற்று சந்தித்து பேசினார். இந்தியா - ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்களின் 15வது செயல்பாட்டு கலந்துரையாடலில் இருவரும் பங்கேற்றனர்.இதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பல்துறையில் இணைந்து செயல்படும் நட்புறவு, தொடர்ந்து நிலையான முன்னேற்றத்தை காண்கிறது. இருதரப்பு, சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக பேசப்பட்டது' என, ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து கோவில் தாக்குதல் கனனிடியன் அரசாங்கத்தின் ஏற்பாடு