உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்க முடியாது: அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்க முடியாது: அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

நியூயார்க்: ''வளரும் நாடுகள் ஒற்றை சந்தை அல்லது ஏற்றுமதியாளரை சார்ந்திருப்பதை குறைத்து தங்களது பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவுறுத்தினார். ஐ.நா.,வின் 80வது பொது சபை கூட்டத்தில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இதற்கிடையே ஒருமித்த கருத்து உடைய வளரும் நாடுகளின் தலைவர்களுடன் உயர்மட்ட கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. இதில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: உலகம் தற்போது மிகவும் அசாதாரண சூழலில் உள்ளது. குளோபல் சவுத் எனப்படும் வளரும் நாடுகளாகிய நாம், கொரோனா தொற்றுநோய், உக்ரைன் மற்றும் காசா போர்கள், வானிலை சீற்றங்கள் என பல சவால்களை எதிர்கொள்கிறோம். நிலையற்ற வர்த்தகம், நிச்சயமில்லாத முதலீடு, வட்டி விகித உயர்வுகள் ஆகியவை பொருளா தாரத்தில் பெரும் தாக்கம் செலுத்துகின்றன. பல்நாட்டு ஒத்துழைப்பின் அடிப்படை கொள்கையே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சர்வதேச அமைப்புகள் பலவீனமடைந்துள்ளன; நிதி பற்றாக்குறையால் செயலிழக்கின்றன. சீர்திருத்தங்களை தாமதப்படுத்தியதற்கான விலை இன்று தெளிவாக தெரிகிறது. வளரும் நாடுகள் ஒன்றிணைந்து, சர்வதேச அமைப்பில் சமநிலையை கோர வேண்டும். பொருளாதார பாதுகாப்பிற்காக சுருக்கமான, நம்பகமான வினியோக சங்கிலிகள் அவசியம். ஒரே சந்தை அல்லது ஒரே ஏற்றுமதியாளரை சார்ந்து இருக்கக் கூடாது. உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பை பாதிக்கும் போர்களை உடனடியாக தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வெளியுறவு

அமைச்சர்களுடன்

சந்திப்பு

ஐ.நா., பொது சபை கூட்டத்திற்கு இடையே நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை, மாலத்தீவு, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 13 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

kannan
செப் 25, 2025 13:38

இது மந்திரிகளின் வாரிசுகளுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை


KR india
செப் 25, 2025 09:32

ஆனால், யதார்த்தத்தில் நம் நாடு, ஆதார் மென்பொருள் உட்பட வங்கி மற்றும் அரசு சார்ந்த அலுவல்களை அமெரிக்காவின் மென்பொருளை தான் சார்ந்திருக்கிறோம். Windows Operating System + other Specified Softwares மேலும், ஈமெயில் / சமூக வலைதளம் பயன்படுத்தும் 90 சதவீதம் பேர் அமெரிக்காவின் ஈமெயில் தான் பயன்படுத்துகின்றனர். சீனா-வும், ரஷ்யா-வும் தங்கள் நாட்டின் தேவைகளுக்கு ஏற்றார் போல், Linux Operating சிஸ்டம்-த்தில், அவர்கள் நாட்டின் அரசு மற்றும் வங்கி சார்ந்த தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ரஷ்யா Yandex Mail என்ற ஒரு அருமையான ஈமெயில் வசதியை வழங்குகிறது. நம் இந்தியா எப்போது சுயசார்பு மென்பொருளை அரசு மற்றும் வங்கி தேவைகளை பயன்படுத்தப் போகிறோம் ? மத்தியில் ஆட்சியில் இருப்பது நீங்கள் தானே? நீங்கள் தானே கீழ்கண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 CDAC நிறுவனம் BOSS LINUX bosslinux dot in என்ற Operating System-த்தை வெளியிட்டு வருகிறது. அதை சற்று மேம்படுத்தி, அனைத்து அரசு மற்றும் வங்கிகளில் பயன்படுத்த பரிந்துரைக்கலாம். 2 கடந்த வாரம் தான், India Based GTRI Global Trade Research Initiative நிறுவனம் ஒரு எச்சரிக்கை மணியை அடித்து, மத்திய அரசை தட்டி எழுப்பி உள்ளது. கடந்த வாரம் வெளியான, கீழ்கண்ட செய்தி தலைப்பை இணையத்தில் தேடிப் பாருங்கள். அந்த தலைப்பு இது தான் ஒரே இரவில் இந்தியாவின் பாதுகாப்பே காலி ஆகி விடும். அமெரிக்காவின் ஷாக் திட்டம். எச்சரித்த GTRI . இதற்கு, மத்திய அரசு என்ன முன்னேற்ப்பாடு வைத்துள்ளது. Ministry of Electronics and Information Technology மற்றும் Department of Telecommunication மற்றும் Ministry of Home Affairs ஆகிய மத்திய அமைச்சகம் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இப்போது இந்த செய்தியின் தலைப்பை படியுங்கள் : ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்க முடியாது: அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு என்பது தலைப்பில் உள்ளது ? எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்" என்பது சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற சொற்றொடர் ஆகும், இது மக்களை விழித்து, தங்கள் லட்சியங்களை அடைய அயராது உழைக்கத் தூண்டுகிறது. நமக்கென்று சுயசார்பு மென்பொருளை நாம் எப்போது உருவாக்கி ? எப்போது பயன்படுத்தப் போகிறோம் ?


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 25, 2025 06:15

புரிதலுக்காக: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முக்கியமாக குறிப்பிடுவது, இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகள் தங்களின் தேவைகளுக்காக ஒரே ஒரு நாட்டிலிருந்து/சந்தையிலிருந்து இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல தங்களின் உற்பத்தியை ஏற்றுமதி செய்ய ஒரே ஒரு நாட்டையோ/சந்தையையோ சேர்ந்திருக்கக்கூடாது என்பதுதான். உதாரணத்திற்கு சீனாவிலிருந்து மட்டும் மொபைல் போன் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்தால் ஒரு கட்டத்தில் சீனா ஏற்றுமதிக்கு தடை விதித்தாலோ, வரியை கூட்டினாலோ நமது மொபைல் உற்பத்தி சரியும். அதுபோலவே திருப்பூர் உற்பத்தியாளர்கள் அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்வதால், அமெரிக்கா இறக்குமதிக்கு தடை விதித்தாலோ, வரிகளை கூட்டினாலோ திருப்பூரில் உற்பத்தி நின்றுவிடும். இந்திய தொழிலதிபர்கள் உலகம் முழுவதும் தங்களை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதுவே பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும்.


குமரி குருவி ‌
செப் 25, 2025 05:59

இந்தியா என்றாலே சும்மாவா. உலகே மிரள்கிறது அமெரிக்கா கதறுகிறது


அப்பாவி
செப் 25, 2025 05:51

நாமதான் வல்லரசாச்சே...


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 25, 2025 07:19

ஆமாம். வல்லரசுதான். அல்லது கிட்டதட்ட வல்லரசுதான். பாகிஸ்தான் போல ஆபரேஷன் சித்தூரில் அடிவாங்கியவுடன் கதறிக்கொண்டு அமெரிக்காவின் காலில் விழவில்லை. பாகிஸ்தானில் அமெரிக்கா பதுக்கி வைத்திருந்த அணுகுண்டு சேமிப்பு கிடங்கில் தாக்குதல் நடத்தி இரு நாடுகளையும் மிரள வைத்தோம். இன்றுவரை அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு மிக அதிகமான இறக்குமதி வரி விதித்தாலும், எதிர்த்து நின்று வரியை குறைக்கச்சொல்லி குரல் கொடுக்கிறோம். இன்று இந்தியா தனது எரிசக்தி இறக்குமதிக்கு ரஷ்யா, குவைத், எமிரேட்ஸ், சவூதி, வெனிசுவேலா, அமெரிக்கா, நைஜீரியா என்று பல நாடுகளை சார்ந்திருக்கிறது. ரஷ்யா மற்றும் பிரெஞ்சு கயானா நாடுகளில் எண்ணெய் உற்பத்திக்காக பெரும் முதலீடு செய்துள்ளோம். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறோம். மொபைல் உதிரிபாகங்களுக்கு சீனா, தென்கொரியா, ஜப்பான், ஐரோப்பா, ஆசியன் நாடுகளை சார்ந்துள்ளது. அதே சமயம் உலகிலேயே அதிகமான மொபைல் உற்பத்தி செய்கிறோம். இங்கு நான் குறிப்பிடுவது இரண்டு உதாரணங்கள் மட்டுமே.


vivek
செப் 25, 2025 08:36

வல்லரசுக்கும் கேனை அப்பாவிக்கும் என்ன சம்பந்தம்


Kasimani Baskaran
செப் 25, 2025 03:54

அப்படி ஒரு நாட்டை மட்டும் சார்ந்து இருந்தால் கையை முறுக்கும் வேலையே அமேரிக்கா போன்ற நாடுகள் தைரியமாக செய்வார்கள். இந்தியா போன்ற சில நாடுகள் முன்னேறுவது அமெரிக்காவுக்கு சிறிது கூட பிடிக்காது. அதனால்தான் நண்பன் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு. முன்னர் பல பிரதமர்களை கொலை செய்ததில் அமெரிக்காவின் பங்கும் இருந்ததை சிஐஏ வின் முன்னாள் அதிகாரி தனது புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். இன்றும் அதே போல பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து அணுவாயுதத்தை பாகிஸ்தான் மண்ணில் சேமித்து வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்தியாவை தாக்க எளிதான இடமாக மியான்மரை தேர்ந்தெடுத்து வைத்து இருக்கிறார்கள்.


Ramesh Sargam
செப் 25, 2025 02:37

ஸ்திர மனப்பக்குவம் இல்லாத டிரம்ப் போன்ற அதிபர் பதவி வகிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளை யாரும் சார்ந்திருக்க கூடாது.


RAJ
செப் 25, 2025 02:29

சார் எப்பவும் முத பந்துல சிக்ஸர்.. ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை