உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மிஸ் யுனிவர்ஸ் மகுடம் சூடினார் விக்டோரியா கேர்!

மிஸ் யுனிவர்ஸ் மகுடம் சூடினார் விக்டோரியா கேர்!

மெக்சிகோ: டென்மார்க்கின் விக்டோரியா கேர் 2024ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றி பெற்று, 73வது மிஸ் யுனிவர்ஸ் என்ற பெருமையைப் பெற்றார்.2024ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 130 பேர் போட்டியில் பங்கேற்றனர். இதில் வெற்றியாளரை தீர்மானிக்கும் சுற்றில், டென்மார்க், வெனிசுலா, மெக்சிகோ, நைஜீரியா, தாய்லாந்து நாட்டு அழகிகள் பங்கு பெற்றனர். இறுதி சுற்றில், டென்மார்க்கின் விக்டோரியா கேர் வெற்றி பெற்றார். இவர் 2024ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று, 73வது மிஸ் யுனிவர்ஸ் என்ற பெருமையைப் பெற்றார். 2வது இடம் நைஜீரியாவை சேர்ந்த சிடிம்மாவுக்கு கிடைத்தது. மூன்றாவது இடத்தை மெக்சிகோவை சேர்ந்த மரியா பெர்னாண்டா தட்டிச் சென்றார். 4வது இடம் தாய்லாந்தை சேர்ந்த சுசாடா சுவாங்கிரிவுக்கும், 5வது இடம் வெனிசுலாவை சேர்ந்த இலியானா மார்க்கஸ்க்கும் கிடைத்துள்ளன. மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி சென்ற, டென்மார்க்கின் விக்டோரியா கேர்வுக்கு, சமூகவலைதளத்தில் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

யார் இந்த விக்டோரியா கேர்?

* டென் மார்க்கை சேர்ந்தவர் விக்டோரியா கேர். இவருக்கு வயது 21.* இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் நடன கலைஞர். * இவர் பிசினஸ் மற்றும் மார்கெட்டிங்கில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.* டென் மார்க்கை சேர்ந்தவர், முதல் முறையாக மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற பெருமை விக்டோரியா கேர்வுக்கு கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
நவ 17, 2024 20:22

இப்பொழுது அழகுப்பொருட்கள் டென்மார்க் மற்றும் பக்கத்து நாடுகளில் இவளை முன்னிறுத்தி அட்வெர்ட்டிஸ் செய்து தனது தொழிலை பெருக்கிக்கொள்ளும்???இதுக்காகத்தானே இந்த மிஸ் யூனிவேர்ஸ் போன்ற அழகிப்போட்டிகள் முக்கியத்துவம் தருகின்றது???இல்லையென்றால் சினிமாவில் நடிகை???


Oviya Vijay
நவ 17, 2024 12:24

இவ்வளவு நியூஸ்ல இந்தியா சார்பா யார் கலந்துகிட்டா... அவங்க எத்தனையாவது இடம் பிடிச்சாங்க... எத்தனையாவது சுற்றுல வெளியேறுனாங்க...


கண்ணன்,மேலூர்
நவ 17, 2024 13:21

அது என்னமோ தெரியல இந்த மாதிரி யுனிவர்சல் மற்றும் உலக அழகி போட்டிகளில் கலந்துகிட்டு ஜெயிக்கிறவளுகளை எல்லாம் நல்லா பாருங்க வாயை ஆஆஆன்னு தொறந்துகிட்டு கையை வச்சு வாயை பொத்திக்கிட்டு இழவு வீட்ல அழற மாதிரி தேம்பி தேம்பி அழுவாளுக. இதேது ஆணழகன் போட்டியில் ஜெயிக்கிற யாரும் இப்படி அழுவதை பார்த்ததில்லை!


முக்கிய வீடியோ