உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

 நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நம் அண்டை நாடான நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் நேற்று காலை 7:00 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சங்குவாசபா மாவட்டத்தின் ரிடாக் பகுதியை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இதன் தாக்கம், தப்லேஜங், போஜ்புரிலும் உணரப்பட்டன. நிலநடுக்கத்தின் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் உலக நாடுகளில், நேபாளம், 11வது இடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை