உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா, சீனா அதிபர்களுடன் மோடி சந்திப்பு எதிரொலி: டிரம்ப் புலம்பல் அதிகரிப்பு!

ரஷ்யா, சீனா அதிபர்களுடன் மோடி சந்திப்பு எதிரொலி: டிரம்ப் புலம்பல் அதிகரிப்பு!

வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சு நடத்திய நிலையில், 'இந்தியாவுடன் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வணிகமே செய்கிறோம். அவர்கள் எங்களுடன் அதிகமாக வணிகம் செய்கிறார்கள்' என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் புலம்பல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.ரஷ்யாவிடம் பெட்ரோலியம் வாங்குவதாக கூறி, இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். எனினும், அவரது உருட்டல் மிரட்டல்களுக்கு மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில், சீனாவில் நடந்த மாநாட்டில் ரஷ்யா மற்றும் சீன அதிபர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு நடத்தியுள்ளார்.இந்திய - அமெரிக்க உறவு சீர் குலைந்துள்ள நிலையில், ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டியது அனைத்து சர்வதேச ஊடகங்களிலும் செய்தி ஆகியுள்ளது. இந்நிலையில், தனது வழக்கமான சமூக ஊடகப் புலம்பலை இன்று டிரம்ப் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது அறிக்கை: இந்தியாவுடன் நாங்கள் மிகக் குறைந்த வணிகமே செய்கிறோம், ஆனால் அவர்கள் எங்களுடன் மிகப்பெரிய அளவிலான வணிகமே செய்கிறார்கள் என்பது சிலருக்குப் புரிகிறது.வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் எங்களிடம் மிகப்பெரிய அளவிலான பொருட்களை விற்கிறார்கள், அவர்களின் மிகப்பெரிய வாடிக்கையாளராக நாங்கள் இருக்கிறோம். நாங்கள் அவர்களிடம் மிக குறைவான பொருட்களை மட்டுமே விற்பனை செய்கிறோம்.இதுவரை முற்றிலும் ஒருதலைப்பட்ச உறவு, அது பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. இதுவரை, இந்தியா எங்களிடம் அதிகமான வரிகளை வசூலித்துள்ளது. எல்லா நாட்டுடனும் ஒப்பிடும்போது எங்களது வணிகம் இந்தியாவுடன் மிக குறைவாகவே இருக்கிறது. இது முற்றிலும் ஒருதலைப்பட்ச பேரழிவாகும்.மேலும், இந்தியா தனது எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்களை ரஷ்யாவிலிருந்து வாங்குகிறது, அமெரிக்காவிலிருந்து மிகக் குறைவாக மட்டுமே வாங்குகிறது. அவர்கள் இப்போது தங்கள் வரிகளை ஒன்றுமில்லாமல் குறைக்க முன்வந்துள்ளனர். ஆனால் அவர்கள் தாமதமாக வந்து உள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அதைச் செய்திருக்க வேண்டும். சில எளிய உண்மைகளை மக்களின் சிந்தனைக்கு முன் வைக்கிறேன்.இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.இந்தியா வரியை குறைக்க முன் வந்துள்ளதாக டிரம்ப் கூறியது பற்றி மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தாமே தடுத்து நிறுத்தியதாகவும், வர்த்தகத்தை காட்டி அவர்களது போரை நிறுத்தியதாகவும் டிரம்ப் கூறியதை, மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Chandhra Mouleeswaran MK
செப் 02, 2025 15:20

ஐயா சாமீ தருமதொரைமாருங்களே ஒரு பத்துப் பதினஞ்சு நட்டு போல்ட்டூ வாசரு தருமம் பண்ணுங்கையா ஒங்களுக்குப் புண்ணியமாப் போவும் நானாச்சும் போயி இந்த ட்ரம்பெட்டுக்கு அதுகள மாட்டி உட்டுட்டு வாரன் இந்தாளு ரோதனை தாங்க முடியலீங்கய்யா தரும தொரைமாருங்களே


Ramesh Sargam
செப் 02, 2025 06:07

போரை நிறுத்த தெரிந்த டிரம்புக்கு வரியை ஏன் குறைக்க தெரியவில்லை.


Nagercoil Suresh
செப் 02, 2025 02:41

அமெரிக்கர்கள் ஒரு மணிநேரம் வேலை செய்வதை இந்தியர்கள் கிட்ட தட்ட 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், ஏன் இந்த டாலர் மதிப்பில் வாங்கும் பொருளுக்கு வேறுபாடுகள்? டாலர் மதிப்பையும் ரூபாய் மதிப்பையும் ஒரே கோட்டில் வைத்து பார்பரா அதிபர் டிரம்ப், புரிதல்கள் தேவை. சீனர்கள் போல் நினைக்காமல் ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறாரோ என்னமோ. இந்தியாவை பொறுத்த மட்டில் தற்போதய சூழலை நினைத்து அமெரிக்காவை முழுவதும் புறம் தள்ள வேண்டாம் அதே நேரம் சீனாவிடம் நல்ல உறவை வளர்த்துக்கொள்வது அமெரிக்காவின் தந்திரத்தை முறியடிக்க கழுவுற மீனுல நழுவுறதை போல் செயல்பட வேண்டிய காலத்தின் கட்டாயம்...


ManiMurugan Murugan
செப் 02, 2025 00:01

ManiMurugan Murugan அமெரிக்காவின் அனைத்து பொருட்களை வாங்க அவசியம் இல்லை அதுவும் புரிதல் முறையில் தான் வர்த்தகம் செய்யமுடியும் அமெரிக்கா மற்ற நாடுகளுடன் பெரிய வர்த்தகம் செய்கிறதா ராணுவ தளவாடங்கள் வேண்டிய அளவுதான் வாங்க முடியும் அமெரிக்காவின் பிரச்சனையே தளவாடங்களின் தன்மை உலகத்திற்கு தெரிந்து விட்டது என்பது தான் அவர்களிடம் வாங்கிய தளவாடங்களை வைத்து பிரித்து சீனா சமாளிக்கிறது அதனால் சீனாவின் மீது எதுவும் சொல்லாமல் இந்தியாவை சாடிக்கொண்டிருப்பது அமெரிக்காவின் நாகரிக மற்ற செயலே


ManiMurugan Murugan
செப் 02, 2025 00:01

ManiMurugan Murugan அமெரிக்காவின் அனைத்து பொருட்களை வாங்க அவசியம் இல்லை அதுவும் புரிதல் முறையில் தான் வர்த்தகம் செய்யமுடியும் அமெரிக்கா மற்ற நாடுகளுடன் பெரிய வர்த்தகம் செய்கிறதா ராணுவ தளவாடங்கள் வேண்டிய அளவுதான் வாங்க முடியும் அமெரிக்காவின் பிரச்சனையே தளவாடங்களின் தன்மை உலகத்திற்கு தெரிந்து விட்டது என்பது தான் அவர்களிடம் வாங்கிய தளவாடங்களை வைத்து பிரித்து சீனா சமாளிக்கிறது அதனால் சீனாவின் மீது எதுவும் சொல்லாமல் இந்தியாவை சாடிக்கொண்டிருப்பது அமெரிக்காவின் நாகரிக மற்ற செயலே


Tamilan
செப் 01, 2025 22:18

இந்துமதவாத குண்டர்களின் கொள்ளைகளுக்கு துணைபோகவில்லையென்பதற்காக ஒரு நாட்டின் அதிபரை கேலிக்கூத்தாக்குவது இந்துமதத்திற்க்கோ நாட்டுக்கோ நல்லதல்ல


N Sasikumar Yadhav
செப் 02, 2025 00:49

உங்கள மாதிரியான மூர்க்க மதவாத கும்பல்களுக்கு பாரதத்தை பற்றி தெரியாது


Chandhra Mouleeswaran MK
செப் 02, 2025 15:15

அத்து அன்னாங்க அண்ணென் "ஒரு நாட்டின் அதிபர்" ன்னுட்டு ஒரு வள லொளா? என்னாது? நம்ப நாட்டுக்கும் இந்து மதத்துக்கும் நல்லதில்லியா? அப்டீன்னாக்கா நீங்க இதிலெ, அதான் நம்ப நாட்டுலெ சேத்தி இல்லியா அண்ணென்? அவனுங்க, அதாங்க இந்த அம்ம்மேரிக்கனுங்க நம்ம நாட்டு மக்களயும் அரசாங்கத்தயும் மோடிஜியையும் கண்டமேனிக்கி வசை பாடரப்ப இப்பிடி ஒங்களுக்குத் தோளுக தினவு எடுக்கேல்லையா? றாவுலு வின்ஸி என்னா சொல்லுதோ அத்துக்கேத்தாப்பிடி "ஜிஞ்சாக் ஜிஞ்சாக்"


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 01, 2025 22:10

இந்தியாவிற்கு தேவையானதை மட்டும்தான் இந்தியா இறக்குமதி செய்யும்.இதில் தவறு ஒன்றும் இல்லை. அமெரிக்காவின் பன்றி, மாட்டு இறைச்சி இந்தியாவிற்கு தேவையில்லை. இந்தியா பெரும்பான்மை பொருட்களுக்கு சுயசார்புள்ள நாடு.


Appan
செப் 01, 2025 21:38

ரஷ்யா உக்ரைன் போர் சமாதான பேச்சு கையெழுத்து புடின். மோடி , Zelenskyy , ஐரோப்பா சேர்ந்து முடிவு எடுக்க போகிறார்களாம். இப்படி நடந்தால் அமெரிக்க தனித்து விட படும். அப்புறம் வெள்ளை idamin என்ன செய்வார் ..?


Mecca Shivan
செப் 01, 2025 21:16

இவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதிற்கு இந்தியாதான் காரணம் என்பதே இவர் புலம்பலுக்கு காரணம்


raj
செப் 01, 2025 20:55

பாக்கிஸ்தான் அமெரிக்கா கிட்ட போய் கெஞ்சியது போரை நிறுத்த சொல்லி அமெரிக்கா இந்தியாவிடம் கேட்டது போரை நிறுத்த முடியுமா அதற்கு இந்தியா பாக்கிஸ்தான் பேசட்டும் அப்பறோம் பார்க்கலாம் என்று அப்படி தான் போர் நின்றது டிரம்ப் முந்திரி கொட்டை மாதிரி இந்திய போர் நிறுத்தம் அறிவித்தார். ஆனால் இது கூட தெரியாம இந்தியா சொல்லுவதை நம்ப முடியாது ஏன் என்றால் மோடி எதிர்ப்பு மட்டுமே மனதில் என்ன செய்தாலும் நீங்கள் இந்தியா மற்றும் இந்திய அரசாங்கத்தை நம்ப போவது இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை