உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பசி மற்றும் வறுமை ஒழிப்பு குறித்து ஜி - 20 மாநாட்டில் மோடி பேச்சு

பசி மற்றும் வறுமை ஒழிப்பு குறித்து ஜி - 20 மாநாட்டில் மோடி பேச்சு

ரியோ டி ஜெனிரோ, பிரேசிலில் நடக்கும் 'ஜி - 20' உச்சி மாநாட்டில், 'சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9kc2wjko&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக, மேற்காசிய நாடான நைஜீரியாவுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தார்.அங்கு, அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்து பேசினார். அங்கிருந்து புறப்பட்ட மோடி, தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு நேற்று சென்றடைந்தார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நேற்று நடந்த, 'ஜி - 20' உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார்.

பாராட்டு

மாநாட்டின் துவக்க அமர்வில், 'சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:ஜி - 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு பாராட்டுகள். இந்த மாநாடு, நிலையான வளர்ச்சி என்ற இலக்கை மையமாக வைத்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த அணுகுமுறை, உலகளாவிய தெற்கின் பிரச்னைகளை எடுத்துக் காட்டுகிறது. கடந்த ஆண்டு டில்லியில் நடந்த ஜி - 20 மாநாட்டில் மக்களை மையமாக வைத்து, 'ஓர் பூமி; ஓர் குடும்பம்; ஓர் எதிர்காலம்' என்ற மையக்கருத்தை முன்னெடுத்து செல்கிறது.வறுமை மற்றும் பசியை போக்க இந்தியா பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில், 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்களை அளித்து வருகிறோம். 'அடிப்படைக்கு திரும்புவோம்; எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவோம்' என்ற எங்கள் அணுகுமுறை சிறந்த பலனை அளிக்கிறது.

தட்டுப்பாடு

உலக அளவில் தற்போது நடக்கும் போர்களால், உலகளாவிய தெற்கில் உணவு, எரிபொருள், உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த நேரத்தில், பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை நிறுவுவதற்கான பிரேசிலின் முயற்சி பாராட்டுக்குரியது.இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு, தென் அமெரிக்க நாடான கயானா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் அலியை சந்திக்க உள்ளார்.இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.

நைஜீரிய

அதிபருக்கு பரிசுநைஜீரியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபுவுக்கு, வெள்ளியால் ஆன பஞ்சாமிர்த கலசத்தை பரிசாக அளித்தார். மஹாராஷ்டிராவின் கோலாபூரில் வடிவமைக்கப்பட்ட இந்த கலசம், 'சிலோபர் பஞ்சாமிர்த கலசம்' என்று அழைக்கப்படுகிறது. மிக அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கலசத்தின் மீது மலர்கள், கடவுள் உருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mario
நவ 19, 2024 09:03

அந்த மணிப்பூர்?


hari
நவ 19, 2024 09:16

அந்த வேங்கைவயல்.... மரியோ


Tamilselvan,kangeyam638701
நவ 19, 2024 10:14

லண்டன்ல இருக்க ஒனக்கு வேற வேலையே இல்லையா இதே பொழப்பாவே திரியிற? அப்படி உனக்கு மணிப்பூர் மக்கள் மேல அக்கறை... இருந்தா லண்டன்ல இருந்து மணிப்பூருக்கு வந்து அந்த மக்களுக்காக போராட்டம் பண்ணு அதவிட்டு நானும் கருத்து... போட்றேன்னு சீன் காட்டாத...


Duruvesan
நவ 19, 2024 06:47

பாஸ் அங்கேயுமா? ஓ எலெக்ஷன் பிரச்சாரம் முடிஞ்சிடுச்சி, எங்கயாவது உருட்டணும். டெல்லி ல காற்று சுத்தம் ஜீரோ, இங்க இன்னும் பசி பட்டினி ஒழியல, பொருளாதாரம் சரிவு, வேலையின்மை, பங்கு சந்தை சரிவு, அன்றாட பொருட்கள் விலை உயர்வு, இதெல்லாம் உட்டுட்டு நாம உலக லெவெல்ல உருட்ட போய்ட்டோம், இவரும் விடியலும் விளம்பர பிரியர்கள். கடமையில்???


Arunkumar,Ramnad
நவ 19, 2024 08:43

தத்தி விடியலோட பிரதமரையும் விவரமா நைசா சேர்க்கிற பாத்தியா அங்கனதான் நீ இங்க இருக்கிற சமச்சீர் உபிஸ்களில் கொஞ்சம் விஷய ஞானமுள்ள உபிஸ் என்பதை நிரூபிக்கிற ஆனா ஊபிஸ்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் நாங்க கண்டுபிடித்து விடுவோம் ஏன்னா எங்களிடம் விஷேச கண்ணாடி உள்ளது.


அப்பாவி
நவ 19, 2024 06:42

போரெல்லாம் நின்னு போச்சு.


hari
நவ 19, 2024 09:17

ஆனா அந்த பாஞ்சூ லட்ச புலம்பல் இருக்கா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை