உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: எதிராக போராடிய துறவி கைது

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: எதிராக போராடிய துறவி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹிந்து மத துறவியை போலீசார் கைது செய்தனர்.வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது முதல் தற்போது வரை, ஹிந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் அவர்களின் வழிபாட்டு தலங்கள், வீடுகள், சொத்துகள், உடமைகள் சேதம் அடைக்கின்றன. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என , முகமது யூனுஷ் தலைமையிலான அந்நாட்டின் இடைக்கால அரசு உறுதியளித்த போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை. மாறாக, தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹிந்து மத அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kz6w61g2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த போராட்டத்தை, அந்நாட்டில் உள்ள பண்டரிக் தம் என்ற ஹிந்து மத அமைப்பின் தலைவர் சின்மயி கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி தலைமை ஏற்று நடத்துகிறார். ரங்பூர் என்ற இடத்தில் கடந்த 22ம் தேதி இவரது தலைமையில் போராட்டம் நடந்தது. பிறகு அங்கிருந்து தலைநகர் டாக்காவிற்கு வந்த இவரை, விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். போராட்டத்தின் போது காவிக்கொடி ஏந்தியதற்காக தேச துரோகம் உள்பட 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கிருஷ்ண தாஸ் கைதுக்கு ஹிந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

subramanian
நவ 26, 2024 07:38

வங்கதேச இடைக்கால அரசு நம்பிக்கை இழந்து விட்டது. அதிகாரத்தில் இருக்கும் தகுதியில்லாத மக்கள் விரோத கூட்டம்.


SUBBU,
நவ 25, 2024 21:14

இந்துக்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கும் போதெல்லாம் மற்ற மதத்தினர் அனைவரும் அமைதியாக இருக்கவே விரும்புகின்றனர். அதே சமயம், ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் ஒரு இந்து எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து தன்னால் இயன்ற உதவிகளை செய்வான். இந்துக்கள் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும் யார் நமக்கு நண்பன், யார் நமக்கு விரோதி என்பதை அடையாளம் காணும் நேரம் வந்துவிட்டது.


ஆரூர் ரங்
நவ 25, 2024 20:56

பாக்கி க்கு செய்தது போல இவர்களுடன் செய்து கொண்ட நதிநீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்வதாக மிரட்ட வேண்டும். இல்லையென்றால் மமதாபேகம் ஒத்துழைப்புடன் இங்கும் ஹிந்துக்களுக்கும் ஆபத்து விளைவிப்பர்


Ramesh Sargam
நவ 25, 2024 20:22

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடனே தலையிட்டு, அந்த ஹிந்து துறவியை காப்பாற்றவேண்டும், அவருக்கு ஏதாவது விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு.


GMM
நவ 25, 2024 20:06

வங்க தேசத்தை இராணுவ நடவடிக்கை மூலம் இந்திய நிர்வாகத்துடன் இணைக்க முடியும். இடைக்கால தீவிரவாத அமைப்பு சீனாவின் இராணுவ கட்டுபாட்டில் இருக்க வேண்டும். இவர்களை இஷ்டம் போல் விட்டால், இந்த பிராந்தியத்தில் அமைதியை கெடுத்து விடுவர். ஆக்கிரமிப்பு பகுதியில் அமைதி இருக்காது . சர்வதேச அமைப்பு நடுநிலையில் இல்லை.


Dharmavaan
நவ 25, 2024 19:07

அவர்களக்கு உதவி பாம்புக்கு பால் வார்ப்பது போல் நன்றி கேட்ட மிருகங்கள்


Nandakumar Naidu.
நவ 25, 2024 19:00

இந்த வங்க தேச மத வெறி பிடித்த ஹிந்து விரோத தலைவனுக்கு எதற்கு நோபல் பரிசு? இந்தியாவில் உள்ள ஹிந்துக்கள் இன்னும் நன்றாக தூங்கி கோமாவில் போங்காடா. இந்தியாவில் உள்ள அனைத்து ஹிந்துக்களும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த வேண்டாமா. ஏன் நாம் இன்னும் சுயநல வாதிகளாக இருக்கிறோம்?


KRISHNAN R
நவ 25, 2024 18:54

இங்கு உள்ள நிலைமை என்ன


Anand
நவ 25, 2024 18:52

பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஆதரவா ஊளையிடும் இங்குள்ள கூட்டுக்களவாணிகள் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் விவகாரத்தில் அனைத்தையும் மூடிக்கொள்வார்கள்..


Sudarsan Ragavendran
நவ 25, 2024 18:52

\போராட்டத்தின் போது காவிக்கொடி ஏந்தியதற்காக தேச துரோகம் உள்பட 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன\ - நமது நாட்டில் நம் நாட்டிற்கு எதிராக பேசினால் கூட பேச்சுரிமை என்ற பெயரில் எளிதாக கடந்து செல்வர்


KRISHNAN R
நவ 25, 2024 20:46

இங்கு நம்மை திட்டி பாடினாலும் வழக்குகில்லை


சமீபத்திய செய்தி