உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இத்தாலி பார்லிமென்ட்டில் எம்.பி.க்கள் மோதல்:

இத்தாலி பார்லிமென்ட்டில் எம்.பி.க்கள் மோதல்:

மிலன்: இத்தாலியில் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு இன்று துவங்க உள்ள நிலையில், நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஒருவரையொருவர் மோதிக்கொண்ட சம்பவம் நடந்தது.இத்தாலி பார்லிமென்ட் கூட்டம் நேற்று நடைபெற்றது. இங்கு வடக்கு பகுதி மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக ஆளும் கட்சி அமைச்சர் ராபர்டோ கால்டெரோசின் உரையாற்றினார். அப்போது பைவ்ஸ்டார் இயக்கத்தைச் சேர்ந்த லியானார்டோ டோனோ என்ற எம்.பி., இத்தாலி தேசிய கொடியை ராபர்டோ கால்டெரசி கழுத்தில் கட்ட முயன்றார்.இதனை சக எம்.பி.க்கள் தடுத்தனர். இதில் ஏற்பட்ட கைகலப்பு மோதலாக மாறியது. இதையடுத்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதன் வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது.ஜி - 7 நாடுகளின் உச்சி மாநாடு, இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் இன்று துவங்கி 15-ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இரவு பிரதமர் மோடி இத்தாலி புறப்பட்டு சென்றார். இந்த சூழ்நிலையில் அங்கு பார்லிமென்ட்டில் அடிதடிநடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram pollachi
ஜூன் 14, 2024 10:43

அட விடுங்க சார் ! வீட்டுக்கு வீடு வாசல் படி.... சண்டை எல்லாம் ஒன்னும் இல்லை இது எங்க பொழுதுபோக்கு விடுங்க !


Kasimani Baskaran
ஜூன் 14, 2024 05:49

வெள்ளைக்கார இனம்தான் உலகில் தலை சிறந்த இனம் என்று ஐரோப்பாவில் பல நாடுகள் சிந்திப்பவை. அதில் இத்தாலியும் ஒன்று.


இராம தாசன்
ஜூன் 14, 2024 04:56

இப்போ புரியுதா பப்பு கும்பல் எங்கிருந்து கூச்சல் குழப்பம் பன்றாங்க என்று


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை