உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிந்துக்களை சமாதானபடுத்த வங்கதேச அரசு முயற்சி

ஹிந்துக்களை சமாதானபடுத்த வங்கதேச அரசு முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: டாக்கா: வங்கதேசத்தில் துர்கா பூஜை பந்தல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், ஹிந்துக்களை சமாதானபடுத்தும் வகையில், அந்நாட்டின் மிகப்பழமையான தாகேஸ்வரி கோவிலுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஷ் நேரில் சென்றார்.மேற்கு வங்கத்தைப் போலவே, நம் அண்டை நாடான வங்கதேசத்திலும் துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 32,000க்கும் மேற்பட்ட பந்தல்கள் அமைக்கப்பட்டன. இந்த கொண்டாட்டங்களின் போது, 35க்கும் மேற்பட்ட அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி உள்ளன; 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 பேர் கைதாகி உள்ளனர். டாக்கா அருகே உள்ள சத்தோகிராம் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தலில் நுழைந்த ஏழு பேர், இஸ்லாமிய பாடல்களை பாடினர். இதனால், அங்கு திரண்டிருந்த ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் தொடர்பாக ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6ozxhoa3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுமட்டுமின்றி, டாக்காவில் உள்ள டாட்டி பஜார் என்ற இடத்தில், துர்கா பூஜை பந்தல் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், ஒருவர் காயம் அடைந்தார். இதுகுறித்து நம் வெளியுறவுத் துறை கண்டன அறிக்கை வெளியிட்டது. ஹிந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதையும், அவர்கள் தங்கள் பண்டிகைகளை அச்சமின்றி கொண்டாடுவதையும் வங்கதேச அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.இந்நிலையில் , வங்கதேச ஹிந்துக்களை சமாதனப்படுத்தும் வகையில், மிகப் பழமையான தாகேஸ்வரி கோவிலுக்கு முகமது யூனுஸ் சென்றார்.பிறகு அவர் கூறுகையில், அனைத்து குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையிலான வங்கதேசத்தை கட்டமைக்க அரசு விருமபுகிறது. 'நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் உரிமையும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். துர்கா பூஜையின் போது, மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து பாதுகாப்பு படையினர் கடுமையாக உழைத்தனர். இந்த விவகாரத்தில் கூட்டுத் தோல்வி ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இரண்டாவது முறை

வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்தின் போது, ஏற்பட்ட கலவரத்தின் போதும் ஹிந்துக்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்து இருந்தார். அப்போது முகமது யூனுஸ், தாகேஸ்வரி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது, கோயில் நிர்வாகிகளிடம் நீதி மற்றும் சம உரிமை வழங்கப்படும் என அவர் உறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sathyanarayanan Sathyasekaren
அக் 13, 2024 20:07

திருட்டு திராவிட கட்சிகளின், கான் காங்கிரஸ் காட்சியிலும் இருக்கும் சொரணை அற்ற ஹிந்து MP கள் பாராளுமன்றத்தில் இந்த கொடுமைகளை ஏன் கேட்பதில்லை. சொரணை உள்ள ஹிந்து வியாபாரிகள் பங்களாதேஷுக்கு பொருட்களை அனுப்ப கூடாது. மின்சாரம் பெட்ரோல் ஆகியவற்றை தாக்குதல் நடந்த உடனே நிறுத்த வேண்டும், அங்கே ஒரு கோவிலில் குண்டு வெடித்தால், அங்கே பத்து மசூதியில் RAW மூலமாக வெடிக்கவைத்தால் தான் இந்த பயங்கரவாத மூடர்களுக்கு புரியும்.


sridhar
அக் 13, 2024 13:27

' அவங்க ' எண்ணிக்கை அதிகமானா என்ன நடக்கும் என்பதை இன்னமும் அறியாதவர்கள் திமுக அபிமான ஹிந்துக்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 13, 2024 19:57

தெரிந்தே மறைப்பதற்கும் ..... நிசம்மாவே தெரியாமல் போவதற்கும் - உலக வரலாறு நடந்ததைக் கூறினாலும் - வித்தியாசம் இருக்கு தல .......


RAMAKRISHNAN NATESAN
அக் 13, 2024 12:34

ஹிந்துக்கள் வெளியேறினால் எப்படி அவர்கள் பிழைப்பார்கள் ? வங்கதேச இஸ்லாமிய வர்த்தகர்கள் பல பெரிய நிறுவனங்களை நடத்தினாலும் அதில் நிர்வாகிகளாக மேனேஜ்மேண்ட் டீம் இல் இருப்பது பெரிய படிப்புக்கள் படித்த ஹிந்துக்கள்தான் .... மதவெறியால் பாதிக்கப்படுவது அனைவரும்தான் .....


Rasheel
அக் 13, 2024 11:56

மதத்தின் பெயரால் அழிவை ஏற்படுத்தும் அநாகரீகம்.


வைகுண்டேஸ்வரன்
அக் 13, 2024 10:58

மணிப்பூர் கலவரம் பற்றியே யாரும் பேசுவதில்லை. பேசினாலும் பயனில்லை. வங்கதேசம் பற்றி மட்டும் பேச வேண்டுமா?


karupanasamy
அக் 13, 2024 11:49

நீ எங்கு இருந்து வந்தப்பா ?


Kumar Kumzi
அக் 13, 2024 13:24

என்னடா இது பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா பேரு வை குண்டு ஹாஹாஹா


sridhar
அக் 13, 2024 13:29

நீ ஒரு ஓரமா உட்கார்ந்து உனக்கு நீயே பேசிக்கோ , யார் தடுத்தா . ரொட்டி பால் பணம் …கேவலம் .


Yuvaraj Velumani
அக் 13, 2024 19:20

வேங்கை வயல் பத்தி பேசு


rasaa
அக் 13, 2024 10:42

இஸ்லாமிய வெறியர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள். சோத்துக்கே வழி இல்லையென்றாலும் எவனாவது பச்சை கொடியை ஆட்டிக்கொண்டு வந்தால் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் செல்வார்கள். இவர்களை 1%கூட நம்பக்கூடாது. சுயநலத்திற்காக எதையும் செய்வார்கள். ஒரு வருடம் முன்பு இஸ்ரேல் பொதுமக்கள்மீது ஹமாஸ் கொலைவெறி தாக்குதல் நடத்தி பல நூறு மக்களை கொன்று குவித்தது. பின்னர் நடந்ததுதான் சரித்திரம். இன்று அவர்களின் லட்சக்கனக்கான மக்கள் கொல்லப்பட்டு நடுத்தெருவில் நிற்கின்றார்கள்.


Barakat Ali
அக் 13, 2024 10:25

ஹிந்துக்களை ஒடுக்கினாத்தான் நம்ம ஆளுங்க சந்தோசப்படுவாங்க ன்னும் புரியுது .... அதே சமயம் அங்கே ஹிந்துக்கள் கடை வைத்திருக்கிறார்கள் ..... அல்லது தொழில் நிறுவனங்களை நடத்துகிறார்கள் ...... அவங்க வெளியேறினா பொருளாதார இழப்பு ன்னும் புரியுது ........ யூனுஸ் க்கு சங்கடம் ....


V RAMASWAMY
அக் 13, 2024 10:08

பங்களா தேஷிலுள்ள இந்துக்களைக் காட்டிலும் பரதத்திலுள்ள பங்களா தேசிகள் தான் அதிகமென்பதையும் இந்துக்களுக்கு அங்கு தொந்திரவு கொடுத்தால், இங்குள்ள அவர்கள் தேசத்தினரின் நிலைமை என்னாகுமென்பதையும் அவர்கள் உணரவேண்டும். இதனை நம் அரசு அவர்களுக்கு வலியுறுத்தி சொல்லவேண்டும்.


M Ramachandran
அக் 13, 2024 10:03

இதே இஙகு முஸ்லீம் மக்களுக்கு எதாவது அசம்பாவிதம் ஏர் பட்டிருந்தால் உலகி உள்ள மூளையய முடுக்கிலிருந்தஎல்லாம் குஞ்சு குழுவின் முதல் ஒரு பாட்டம் திட்டி ஒப்பாரி வைத்திருக்கும். ஆகையினால் மோடி தைரிய மாக உலகிலென புகுந்து பட்டாம் கற்பிக்கலாம். அலகு உள்ள பாகிஸ்தான் ஏஜெண்டுக்கல்லை. கால்கள் இடுக்கில் சூட்டு கோல் வைத்து அவன்ங்கள் சூடு தணிக்க வைக்கலாம்.


R.Subramanian
அக் 13, 2024 10:00

பிரச்னை அவர்களின் மதம் மற்றும் மத தலைவர்கள்.. அப்ரஹாமிய மதங்களில் சீர்திருத்தம் செய்தால் தான் உலகம் அமைதி பெரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை