உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் ரயிலில் பயணிகள் 10 பேர் மீது கத்திக்குத்து; பிரதமர் கேர் ஸ்டார்மர் கண்டனம்

பிரிட்டன் ரயிலில் பயணிகள் 10 பேர் மீது கத்திக்குத்து; பிரதமர் கேர் ஸ்டார்மர் கண்டனம்

லண்டன்: பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அருகே ரயில் பயணிகள் மர்ம நபர்களால் 10 பேர் கத்தியால் குத்தப்பட்டனர். இதில் 9 பேர் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.கேம்பிரிட்ஜ் அருகே ஹண்டிங்டனுக்கு செல்லும் ரயிலில் பயணித்தவர்கள் மீது இந்த கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து விசாரிக்கிறோம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில், 9 பேர் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒருவர் லேசான காயத்துடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். ''தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் பெரிய கத்தியை வைத்து இருந்தார். எங்கே பார்த்தாலும் ரத்தம்'' என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அதிர்ச்சியுடன் தெரிவித்தார். இந்த கத்திக்குத்து சம்பவத்தை பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் கண்டித்து உள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஹண்டிங்டன் அருகே ஒரு ரயிலில் நடந்த கொடூரமான சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. அவசர நடவடிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் போலீசாரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கேர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Vijay D Ratnam
நவ 02, 2025 17:36

கடந்த 25 ஆண்டுகளில் பாகிஸ்தானியர்கள் அதிகம் இங்கிலாந்துக்குள் சென்று இருக்கிறார்கள். இந்தியர்கள் நாம் அங்கு நுழைவதுதான் கஷ்டம்.இருபது முதல் முப்பத்தைந்து வயதுள்ள ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ, ரயில் நிலைய வாசல்களில் பிளாக்கில் சிகரெட் விற்கிறார்கள் தைரியமான சிலர் கஞ்சா விற்கிறார்கள். இங்கிலாந்தில் பாகிஸ்தானியர்கள் வளர்ச்சி அபரிமிதமாக இருக்குது.


R. SUKUMAR CHEZHIAN
நவ 02, 2025 14:44

ஜாலியான் வாலா படுகொலை, தேவையில்லாத பாரத பிரிவினையை உண்டாக்கியது அப்போது ஏற்பட்ட அப்பாவி இந்துகளின் படுகொலை இந்து சிறுமிகள் பெண்கள் கற்பழிப்பு சொந்த பந்தங்களை இழந்து மூதாதையர் வாழ்ந்த சொந்த பூமியை விட்டு பல லட்சம் மக்கள் தெருவில் அனாதையாக ஆக்கிய பாவ கர்மா சும்மாவா விட்டும். இவர்கள் வளத்து விட்ட இஸ்லாமிய பயங்கரவாத கும்பல்களாலேயே பிரிட்டன் சின்னாபின்னமாக போகுது.


தமிழ்வேள்
நவ 02, 2025 13:53

மூர்க்க கும்பலை தாராளமாக அனுமதித்ததன் வினை தற்போது பிரிட்டன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பா & அமெரிக்கா அலறி அழுகிறது..


Senthoora
நவ 02, 2025 16:32

ஆனால் அண்மையில் பிரிட்டனில் இந்தியனே வெளியேறு என்றுதானே போராட்டம் நடந்தது,


வாய்மையே வெல்லும்
நவ 02, 2025 11:56

தங்களோடயே பிரிட்டன் நாட்டிலேயே இருக்க செய்தது தேளுக்கு பாலுட்டிய கதை . தேள் தன்னோடைய வேலைய செய்ய தொடங்கிற்று .


Rathna
நவ 02, 2025 11:39

இங்கிலாந்து, காட்டன்களை பாக்கிஸ்தான், பங்களாதேஷ், சிரியா, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் இருந்து மொத்த கொள்முதல் செய்த விளைவை இப்போது அனுபவிக்கிறது. கிட்டதட்ட 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு நமது நாட்டின் செல்வத்தை சுரண்டி நமது நாட்டின் கலாச்சாரத்தை கெடுத்ததன் பலனை அது இப்போது அனுபவிக்கிறது.


Modisha
நவ 02, 2025 11:01

இதை கண்டிக்காத வெறியர்கள் தான் கோவில் கூட்டத்தில் சிலர் இறந்தது பற்றி நக்கல் அடிப்பாங்க.


SENTHIL NATHAN
நவ 02, 2025 09:05

நாட்டை லட்சக்கணக்கான இந்துக்களின் இரத்தம் மற்றும் உயிர்களின் மீது கட்டமைக்க இங்கிலாந்து காரணமாக இருந்தது. அந்த கர்மா இங்கிலாந்து தலை மீது நின்று இங்கிலாந்தை வச்சு செய்கிறது. உதவி வருவோரின் கதைகளையே வெட்டுவோருக்கு இங்கிலாந்து தொடர்ந்து உதவுகிறது. அதற்கு அதுகள் காட்டும் நன்றி கடண் தான் இந்த மாதிரி நிகழ்வுகள். பிபிசி இதைப் பற்றி எந்த சிறப்பு கள் ரிப்போர்ட் தர மாட்டான்.


Rathna
நவ 02, 2025 08:27

மர்ம நபர்கள் என்றாலே யார் என்பது எல்லாருக்கும் தெரியும். பங்களாதேஷிகள் உள்ளே வருவது இந்தியாவில் இது போன்ற சம்பவங்களை நடத்தும்.


Modisha
நவ 02, 2025 08:26

அவனுங்க தான்.


Ramesh Sargam
நவ 02, 2025 08:25

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு பிரச்சினை என்றால், பிரிட்டன் மற்றும் பல இடங்களில் துப்பாக்கி சூடு, கத்திக்குத்து என்று மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று சாகின்றனர். ஏன் இந்த வன்மம்? மக்கள் சுட்டுக்கொண்டும், குத்திக்கொண்டும் மடிகிறார்கள், நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாக மடிகிறார்கள். இயற்கை சீற்றத்தினால் மக்கள் மடிகிறார்கள். இது போதாதென்று அரசியல்வாதிகள் கட்சிக்கூட்டம் என்று கூட்டி, கூட்டத்தில் நெரிசலை ஏற்படுத்தி அவர்கள் தப்பித்துக்கொண்டு, மக்களை சாகடிக்கிறார்கள். உலகம் இப்படித்தான் அழியுமா?


புதிய வீடியோ