வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதிர்ஷ்டக்கார ஊழியர் பா அவரு. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேட்கிறேன். ஊழியர் திருடவில்லை. தவறு செய்த மேலதிகாரியின் சம்பளத்திலிருந்து பிடிக்கவும் என்று தீர்ப்பு வழங்கவேண்டும்.
சாண்டியாகோ: சிலியில் ஊழியருக்கு தவறுதலாக நிறுவனம் சம்பளம் அனுப்பிய விவகார வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், ஊழியருக்கு தானே பணத்தை வைத்துக்கொள்ளும் சட்டபூர்வ உரிமை கிடைத்துள்ளது.சிலி நாட்டில் டான் கன்சோர்சியோ இண்டஸ்ட்ரியல் டி அலிமென்டோஸ் டி என்ற நிறுவனம், உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் பணியை செய்து வருகிறது.இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு ஊழியருக்கு மாதம் 45,950.25(£386) ஊதியம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அந்த ஊழியருக்கு, கடந்த மே மாதம் 2022ல் தவறுதலாக ரூ.1,51,26779.50 (£127,000) அவரது கணக்கிற்கு அனுப்பி விட்டது.தவறுதலாக அனுப்பி வைத்தது குறித்து நிறுவனம் கண்டறிந்து, அந்த ஊழியரை தொடர்பு கொண்டது.ஊழியரிடம் நிறுவனம் தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஒப்படைப்பதாக ஊழியரும் ஒத்துக்கொண்டார்.ஆனால்,தனது சம்பளத்தை விட 300 மடங்கு அதிகமாக ஊதியம் பெற்ற மகிழ்ச்சியில் அந்த ஊழியர் மூன்று நாட்களுக்கு பின்னர் வேலையை விட்டு வெளியேறிவிட்டார்.இந்த நிலையில் அந்த நிறுவனம், சாண்டியகோவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. சம்பந்தப்பட்ட ஊழியர் தங்கள் நிறுவனத்தின் பணத்தை திருடிவிட்டதாக இந்த வழக்கு போடப்பட்டது.3 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏனென்றால், பாதிக்கப்பட்டவர் பணத்தை திருடவில்லை. மாறாக தவறுதலாக அவருக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த வழக்கை கிரிமினல் குற்றமாக கருதி விசாரிக்க முடியாது. தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.தீர்ப்பு குறித்து நிறுவனம் கூறுகையில்,நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவும்,பணத்தை திரும்பப்பெறவும், சாத்தியமான அனைத்து சட்ட வழிகளையும் பின்பற்றுவோம் என்று கூறியது.
அதிர்ஷ்டக்கார ஊழியர் பா அவரு. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேட்கிறேன். ஊழியர் திருடவில்லை. தவறு செய்த மேலதிகாரியின் சம்பளத்திலிருந்து பிடிக்கவும் என்று தீர்ப்பு வழங்கவேண்டும்.