உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது உருமாறிய கொரோனா வைரஸ் ஸ்ட்ரேடஸ்

அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது உருமாறிய கொரோனா வைரஸ் ஸ்ட்ரேடஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன் : அமெரிக்காவில் கொரோனா வைரசின் புதிய உருமாறிய வடிவமான 'ஸ்ட்ரேடஸ்' வேகமாக பரவி வருகிறது.ஸ்ட்ரேடஸ் என்பது கொரோனா வைரசின் புது வடிவமாகும். இந்த வைரஸ் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு, மருத்துவ ரீதியிலான பெயராக எக்ஸ்.எப்.ஜி., என கொடுக்கப்பட்டுள்ளது.இது, ஒரு கலப்பின வைரஸ் ஆகும். இது, நடப்பாண்டு ஜனவரியில் தென்கிழக்கு ஆசியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.உலக சுகாதார நிறுவனம் இதை, ' கண்காணிக்கப்பட வேண்டிய உருமாறிய வைரஸ்' என வகைப்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதன் முதலில் இவ்வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறைவான நோய் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சுகாதார ஆபத்து என்பது குறைவாகவே இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால், ஏற்கனவே உடல்நல குறைபாடு உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சற்று கடுமையான நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.தற்போது அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி, டெலாவேர், வெர்மான்ட், மிச்சிகன், விஸ்கான்சின், மினிசோட்டா மற்றும் வடக்கு, தெற்கு டகோட்டா போன்ற மாகாணங்களில் இந்த வைரஸ் தாக்குதல் வேகமாக அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 04, 2025 10:37

ஏற்கனவே ஒரு வைரஸ் நோபல் பரிசை பிடிக்க வெறி கொண்டு அலைகிறது. நோபலுக்கு மாஸ்க் போடனும்


Rajasekar Jayaraman
அக் 04, 2025 08:04

இந்திய மருந்தை இலவசமாக தரக்கூடாது அமெரிக்காவுக்கு 100% வரி விதித்த டிரம்ப் அதை கொடுத்தே வாங்கிக் கொள்ள வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
அக் 04, 2025 05:24

இது என்னடா புது சுந்தரவல்லியா இருக்கு


Barakat Ali
அக் 04, 2025 07:22

வைரஸின் உருமாற்றத்துக்கு எதிராக அமெரிக்கர்களின் நோயெதிர்ப்பு தன்னைத் தகவமைக்கவில்லை என்று தெரிகிறது ......


Sun
அக் 03, 2025 23:12

வரியா , போடுறே வரி! இப்ப தெரியும்டா உனக்கு! சீனா காரன் யாரு? இந்த ஜீ ஜின் பிங் யாருன்னு?


Ramesh Sargam
அக் 03, 2025 22:35

அந்த வைரசுக்கு வரி போடு - டிரம்ப்


தமிழ் நிலன்
அக் 03, 2025 21:54

எனக்கு தென்கிழக்கு ஆசியா என்றதும் நமது நாச்சியப்பன் பாத்திர கடை சாக்ரடீஸ் தான் ஞாபகம் வந்தது. அவர் மட்டும் இல்லை என்றால்......