உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மியான்மர் உள்நாட்டு போர்; 3 கோடி மக்கள் வெளியேற்றம்

மியான்மர் உள்நாட்டு போர்; 3 கோடி மக்கள் வெளியேற்றம்

நைப்பியதோ: மியான்மரில் நீடிக்கும் உள்நாட்டு போரால், மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து உள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான மியான்மரில், அந்நாட்டு ராணுவத்திற்கும், பூர்வகுடிகளான காரேன் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதுகுறித்து ஐ.நா., சபையின் மனித உரிமைகள் கமிஷன் வெளியிட்ட அறிக்கை:மியான்மரின் ராஹின் மாகாணம் உட்பட பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் மக்கள், பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர். அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இதன் காரணமாக, பாதிக்கும் மேற்பட்ட மக்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர்.கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரை 5,350 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். அவ்வாறு, அகதிகளாக சென்ற மக்களின் நிலை பற்றி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ram
செப் 19, 2024 11:55

எதிர்க்கட்சி தலைவர் அமெரிக்காவின் ரிமோட் டாய்.


Kanns
செப் 19, 2024 09:42

We dont believe in Vested False Proaganda By Biased Foreign-West Media UN etc etc As they are Dead Silent on their Mass Genocides of Natives in all Continents


VENKATASUBRAMANIAN
செப் 19, 2024 08:19

இதுபோன்று எல்லா நாடுகளிலும் நடக்கிறது. சிலர் இந்தியாவிலும் நடத்தி முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு சில கட்சிகள் துணை போகின்றன. மோடி இருப்பதால் ஒன்றும் செய்ய இயலவில்லை.


N.Purushothaman
செப் 19, 2024 06:54

பல நாடுகளில் உள்நாட்டு போர் உருவாக காரணமே "ரெஜிம் சேன்ஜ்" என்கிற அந்நிய சக்திகளின் அஜெண்டா தான் ....தற்போது பங்களாதேஷில் நடந்து உள்ளதும் அதே தான் ...அதை நடத்தியது அமெரிக்கா ...எப்படி இங்கிலாந்தை அவர்களின் கர்ம வினை பதம் பார்க்கிறதோ அதே போல அமெரிக்காவுக்கும் ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை .... மேற்கத்தியர்கள் ஆசிய நாட்டை சேர்ந்த நாடுகள் முன்னேறி உலகை வலை நடத்தக்கூடாது என்கிற கேடு கெட்ட எண்ணம் கொண்டவர்கள் ...அதை எல்லாம் முறியடித்து தான் முன்னேறி செல்ல வேண்டும் ...


vadivelu
செப் 19, 2024 06:29

இருக்கவே இரு க்கு இந்தியாவின் வடா கிழக்கு மாநிலங்கள். நம் நாட்டை வெறுக்கும் தலைவர்களின் பெரும் ஆதரவும் அவர்களுக்கு இருக்கு.


Kasimani Baskaran
செப் 19, 2024 05:19

மியான்மரின் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்வோர் நான்கு அல்லது ஐந்தாண்டுகளாக சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் சிக்கலில் உள்ளார்கள். அங்கு சென்றால் இராணுவம் திரும்ப சிங்கப்பூர் வர அனுமதிக்காது என்று சொல்லப்படுகிறது. கூடுதலாக இளைஞர்கள் அனைவரும் தேசிய சேவைக்கு சேரவேண்டும் என்று சொன்னபின்னர் பலர் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். பல பகுதிகளில் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை