உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நமீபியா அதிபர் உடல் நல குறைவால் காலமானார்

நமீபியா அதிபர் உடல் நல குறைவால் காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வின்ட்ஹேக்: இரண்டாவது முறையாக அதிபராக பதவி வகித்து வந்த நமீபியா அதிபர் ஜியிங்கோப் புற்று நோய் காரணமாக காலமானார்.இது குறித்து நமீபியா ஜனாதிபதி மாளிகை எக்ஸ் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: நமீபியாவின் நீண்ட கால பிரதமராகவும் மூன்றாவது ஜனாதிபதியாகவும் இருந்து வந்த ஜியிங்கோப் புற்று நோய் காரணமாக காலமானார்.கடந்த 1941 ம் ஆண்டு வடக்கு நமீபியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார் ஜியிங்கோப். தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார். இதன் காரணமாக சுமார் 30 ஆண்டுகள் வரையில் போட்ஸ்வானா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து வந்தார்.பின்னர் அரசியலில் நுழைந்து நாட்டின் பிரதமராக நீண்டகாலம் பதவி வகித்து வந்தார். பின்னர் 2014-ம் ஆண்டில் முதன் முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 2013-ம் ஆண்டில் மூளை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் வழக்கமான பரிசோதனையின் போது புற்றுநோய் இருப்பது கண்டறிந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார். நமீபிய தேசம் ஒரு புகழ்பெற்ற மக்களின் சேவகர், ஒரு விடுதலைப் போராட்ட சின்னம், நமது அரசியலமைப்பின் தலைமை சிற்பி மற்றும் நமீபிய வீட்டின் தூண் ஆகியவற்றை இழந்து விட்டது' எனஜனாதிபதி மாளிகை இரங்கல் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
பிப் 05, 2024 00:17

மிகவும் வருத்தமான செய்தி. அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.


Muthu Kumar
பிப் 04, 2024 21:04

Om Shanti Shiva Shiva


Rajesh
பிப் 04, 2024 19:33

RIP


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை