உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தனியார் விண்கலம் புளூ கோஸ்ட்: நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது

தனியார் விண்கலம் புளூ கோஸ்ட்: நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனத்தின் விண்கலம், நிலவில் இன்று வெற்றிகரமாக தரை இறங்கியது.அமெரிக்காவை சேர்ந்த பயர்பிளை ஏரோஸ்பேஸ் நிறுவனம், புளூ கோஸ்ட் என்ற விண்கலத்தை ஜன.,15ல் நிலவுக்கு ஏவியது. இது, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், 'நாசா' மற்றும் தனியார் நிறுவனத்தின் கூட்டுத் திட்டம் ஆகும். திட்டப்படி 2 வாரங்கள் நிலவை சுற்றி வந்த புளூகோஸ்ட் விண்கலம், சில மணி நேரங்களுக்கு முன் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது.நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கிய முதல் தனியார் நிறுவன விண்கலம் இதுதான் என்று திட்டத்தில் பணியாற்றிய டாக்டர் சைமன் பார்பர் தெரிவித்தார். இந்த விண்கலம், நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று அந்த நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்தாண்டு இன்டியூசிவ் என்ற தனியார் நிறுவனம், 'ஒடிசிஸ்' என்ற தங்கள் விண்கலத்தை நிலவில் தரை இறக்கியது. ஆனால், பள்ளத்தில் இறங்கி விட்டதால் அந்த விண்கலம் குப்புற விழுந்து பழுதாகி விட்டது. இதே நிறுவனம், வரும் நாட்களில் தங்கள் இன்னொரு விண்கலத்தை நிலவில் தரை இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
மார் 02, 2025 20:56

அடானியிடம் இந்த ப்ராஜெக்ட்டை இஸ்ரோ கொடுத்தால், ரெண்டே வருடத்தில் கச்சிதமாக நிலவில் இறங்கி சாதனை புரிவார். நிறைய இந்தியவிஞ்ஞானிகள் வாய்ப்புக்காக ஏங்கி உள்ளார்கள். மத்திய அரசு இஸ்ரோவின் பணிச்சுமையை குறைத்து, அதானி, அம்பானி போன்றோரிடம் கொடுத்து, தனியாரை ஊக்குவிக்க வேண்டும்.


அப்பாவி
மார் 02, 2025 19:35

முதல்ல அங்கே இறங்கி நல்ல டோல் ரோடு போடுங்க. பின்னாடி வர்ரவங்க கிட்டே 2047 வரை டோல் வசூல் பண்ணலாம்.


Bye Pass
மார் 02, 2025 22:25

ரெண்டு செங்கல் எடுத்துண்டு போங்கன்னு கொள்ளாதவரை சந்தோஷம்


karupanasamy
மார் 03, 2025 00:58

அப்படியே டாஸ்மாக்கையும் தொறந்து மறக்காம பாட்டுலுக்கு 10ம் வசூல் பண்ணிடலாம். சந்திரமண்டலம்னாலும் நாங்க அநியாயத்துக்கு நியாயஸ்தன்னு சும்மாகிடக்குறானே வடிவேலு பிரச்சார பீரங்கி அவனை விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கிடலாம். என்ன நான் சொல்லுரது ரொம்ப அப்பாவித்தனமா இருக்குதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை