உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளத்தை உலுக்கிய அதிகாலை நிலநடுக்கம்! பீதியில் ஓடிய மக்கள்

நேபாளத்தை உலுக்கிய அதிகாலை நிலநடுக்கம்! பீதியில் ஓடிய மக்கள்

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் தெருக்களில் குவிந்தனர். நடப்பதை உணரமுடியாமல் பதற்றத்தில் அவர்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதி செய்துள்ளது. பூமிக்கடியில் 10 கி.மீ., ஆழத்தில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏதேனும் பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும், பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேபாளத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 157 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ