உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மீண்டும் பற்றி எரியும் நேபாளம்: நேபாள ஜனாதிபதி, பிரதமர் ராஜினாமா

மீண்டும் பற்றி எரியும் நேபாளம்: நேபாள ஜனாதிபதி, பிரதமர் ராஜினாமா

காத்மாண்டு: நேபாளத்தில் மீண்டும் போராட்டம் தொடங்கி உள்ளது. வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு உள்ள போராட்டக்காரர்கள், அதிபர் இல்லத்தை அடித்து நொறுக்கி உள்ளனர். பார்லிமென்ட்டுக்கும் தீ வைத்தனர். இதையடுத்து நேபாள அதிபர், பிரதமர் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.நேபாள நாட்டில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பொங்கி எழுந்த இளைய சமுதாயத்தினர் பெரும் போராட்டத்தில் இறங்கினர். போராட்டக் காரர்களை கட்டுப்படுத்த களம் இறங்கிய அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2s2ilweg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போராட்டம் நாடு முழுவதும் பரவிய சூழலில், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாடு விலக்கி கொண்டது. ஆனாலும் கோபம் தணியாத இளைஞர்கள் மீண்டும் இன்றும் போராட்டம், வன்முறையில் களம் இறங்கி உள்ளனர். ஊழலுக்கு எதிராகவும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளதால் நேபாளம் நாடெங்கும் அமைதியற்ற சூழல் காணப்படுகிறது. போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக், வேளாண் அமைச்சர் ராம்நாத் அதிகாரி, நீர்வளத்துறை அமைச்சர் யாதவ் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டனர். பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் விடுத்த வேண்டுகோளை பிரதமர் சர்மா ஒலி நிராகரித்தார். இதையடுத்து போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. நிலைமை கட்டுக்கடங்காத நிலையில் போராட்டக்காரர்கள் அதிபர் ராம் சந்திரி பவுடெல் இல்லத்தை சூறையாடி இருக்கின்றனர். ராஜினாமா செய்த உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் வீட்டையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.முன்னாள் பிரதமர்கள் புஷ்பகமல் தாஹல் என்னும் பிரசந்தா மற்றும் ஷேர் பகதூர் டியுபா, எரிசக்தி துறை அமைச்சர் தீபக் கட்கா ஆகியோர் இல்லங்களும் போராட்டக்காரர்களின் பிடியில் இருந்து தப்பவில்லை. முன்னாள் பிரதமர் ஒருவரின் மனைவி மீதும் தீ வைத்து எரித்தனர். அமைச்சர்கள் பலரும், ராணுவ ஹெலிகாப்டர்களில் மீட்கப்படுகின்றனர். பார்லிமென்ட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.நாட்டின் பல பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக பிரதமர் சர்மா ஒலி பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அதிபர்ராம் சந்திரி பவுடெலும் ராஜினாமா செய்தார். அமைச்சர்கள் அனைவரையும் பதவி விலகும்படி ராணுவம் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

தத்வமசி
செப் 09, 2025 20:53

இது மாணவர் போராட்டமாக தெரியவில்லை. மக்கள் ஒரு நோக்கு இல்லாமல் தேர்தலில் பெருவாரியான ஓட்டு போட்டு தவறான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டியது. எவனோ வெளிநாட்டு சதிகாரர்கள் தூண்டி விட்டால் இப்படி போராட்டம் நடத்த வேண்டியது. வன்முறைக்கு இங்கே தேவையே இல்லை. எதனால் இப்படி நடக்கிறது என்றால் மக்கள் மாக்களாக மாறும் போது அடுத்தவன் சொல் இனிக்கிறது. சொந்த மூளை என்பது இருந்தால் எப்படி போராட வேண்டும் என்று தோன்றும். வாக்கு எனும் ஆயுதம் இருக்க, கையில் ஏன் ஆயுதம் எந்த வேண்டும் ? அப்படி என்ன பலமான நாடா நீங்கள் ? தவறான பாதையில் இளைஞர்கள் வழிகாட்டப் படுகிறார்கள். வங்கதேசத்தைப் பார்த்து எதுவும் கற்றுக் கொள்ளவில்லை.


Rajan A
செப் 09, 2025 19:11

இது சீனாவின் உள்ளடி வேலையாக இருக்குமோ? அங்கே தான் எல்லாத்துக்கும் தடை உள்ளது


Tamilan
செப் 09, 2025 18:23

யோசிக்க என்ன உள்ளது


ديفيد رافائيل
செப் 09, 2025 17:36

இந்தியாவில் social media தடை செய்யனும்


Rathna
செப் 09, 2025 16:48

இந்த மாதிரி பிரச்சனை அமைதி வழி மர்ம நபர்களால் டெல்லியில் CAA எதிர்ப்பு என்ற பெயரில், அமெரிக்கா தொழில் அதிபர், சீன, பாக்கிஸ்தான் மற்றும் ஜிஹாதி gulf பண உதவியுடன் ஆரம்பித்தது. ஆனால் போராட்டம் ஆறு மாதத்திற்கு மேல் நீடித்ததால் 10000 பேருக்கு மேல் 3 வேளை ஓசி சோறு, காபி, டீ போட்டு கட்டுப்பிடியாகவில்லை. இதை தவிர இதில் கலந்து கொள்ளும் அமைதி வழி மர்ம நபர்கள், அர்பன் நக்ஸல்களுக்கு தினப்படி 1000 மேல் என்பதால் அதை கொடுத்த பிரதான எதிர்க்கட்சி பண பிரச்சனையால் போராட்டத்தை முடித்து கொண்டது. இதை ஒரு கனமான தொகை மூலமாக பைனான்ஸ் செய்த அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரோஸ் தனது நிதி உதவியை நிறுத்தி கொண்டார். மோடி அரசாங்கத்தை அசைக்க முடியவில்லை.


K V Ramadoss
செப் 09, 2025 17:15

இத்தேதான் பங்களாதேஷில் நடந்தது, இப்போது நேபாளத்தில் நடக்கிறது. கடைசியாக இந்தியாதான் அவர்கள் குறி. நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


vadivelu
செப் 09, 2025 16:25

பிரான்ஸ் பிறகு தேபாளம். நாளை இங்கிலாந்து. இந்தியா உள்நாட்டு, வெளிநாட்டு எதிர்ப்புகளை தூசி போல் தட்டி தலை நிமிர்ந்து கற்பக மரமாக நிற்கிறது


KRISHNAN R
செப் 09, 2025 15:46

சீனா ரோல் இருக்கும்.... மகாபலிபுரம் வந்த பிறகு கொரோனா கொடுத்த புண்ணியவான் சாய்னா


Moorthy
செப் 09, 2025 15:45

ஓலி , " சத்தமில்லாமல் " ஒதுங்கி கொண்டார்


AaaAaaEee
செப் 09, 2025 14:57

India should act diplomatically otherwise china which is behind this will take this as well like Tibet


raju
செப் 09, 2025 14:45

இதெல்லாம் இந்தியாவில் நடக்க முடியாது.. good government


முக்கிய வீடியோ