உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டோம்: நம்பிக்கையுடன் சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டோம்: நம்பிக்கையுடன் சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ஈரான் மீதான தாக்குதல் அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக அடைந்து விட்டது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: ஈரான் முழுவதும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் ராணுவத் தளங்கள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏவுகணைகள் தயாரிக்கப்பட்ட இடங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9kgr7a36&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துல்லியமாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருந்தது. ஈரான் மீதான தாக்குதல் அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக அடைந்து விட்டது. இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.

சக்தியை காட்டணும்!

இந்த தாக்குதல் தொடர்பாக ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கூறியதாவது: ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை மிகைப்படுத்தவோ, குறைத்துக் கூறவோ கூடாது. ஈரான் குறித்து தப்புக் கணக்கு போட்டு வருகின்றனர். ஈரானின் சக்தியை இஸ்ரேலுக்கு காட்ட வேண்டும். அந்த சக்தியை எப்படிக் காட்டுவது? தாக்குதலுக்கு எப்படி பதிலடி கொடுப்பது? ஈரான் நலனுக்கு என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து ஈரான் ராணுவ அதிகாரிகளே முடிவு செய்ய வேண்டும். இதை செய்ய வேண்டியது ஈரான் அரசின் கடமையாகும்; நாட்டை காக்க இளைஞர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
அக் 29, 2024 08:16

மனித குலத்திற்கு எதிரான உங்களை அழிக்க..... உலக நாடுகள் அனைத்தும் தயாராக இருக்க வேண்டும்.... அணுகுண்டு போட்டு உங்களை அழித்தாலும் பாவமில்லை....


raja
அக் 28, 2024 13:05

வீரண்டா... நெதன்யாகு மாவீரண்டா...


GMM
அக் 28, 2024 11:39

ஈரானின் அணு அயுதம், கிடங்கு தான் முக்கிய இலக்கு. அது இந்தியா, அமெரிக்கா போன்ற தொழில் நுட்பம் தெரிந்த, ஜனநாயக நாடுகளின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். அல்லது அழிக்கப்பட வேண்டும். ஈரான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளால் பாதுகாக்க முடியாது. உறுதியான முடிவு. எடுக்கவில்லை என்றால், நம்பிக்கை வீண்போகும்.


Apposthalan samlin
அக் 28, 2024 10:59

கொமேனியே தூக்கி அங்கு ஜனநாயக ஆட்சி வந்தால் ஈரான் மக்கள் சந்தோச படுவர் ஈரான் தேசம் வளமான தேசம் விவசாயம் எண்ணைய் தொழிற்சாலைகள் எல்லாம் இருந்தும் மக்கள் பிச்சை எடுக்கிறார்கள் வருவாய் முழுவதும் ஹமாஸ் ,ஹிஸ்புல்லாஹ், ஹவ்த்தி போதாதகுறைக்கு சிரியா தீவிரவாத குழுக்களுக்கு கொடுக்கிறார்கள் ஈரான் மக்களுக்கு ஒன்னும் இல்லை ஈரான் மக்கள் வெறுப்பில் உள்ளார்கள் .


Rpalnivelu
அக் 28, 2024 16:55

மிகக் குறைந்த அளவு ஜனநாயகம் அங்கு சரிப்பட்டு வரும், சிங்கப்பூரில் உள்ளதை போல. அங்கே மதமென்ற தீவிர வாத கும்பல் அதிகம்


Anand
அக் 28, 2024 10:19

ஈரான் இதோட மூடிட்டு இருந்தால் தப்பி பிழைக்க வாய்ப்புண்டு, மூர்க்கங்கள் மத்தியில் கெத்து காட்டுகிறேன் பேர்வழி என ஏடாகூடமாக செய்தால் அழிய நேரிடும்.


kantharvan
அக் 28, 2024 10:49

தப்பி பிழைத்தால் போதுமென நினைக்க ஈரானியர்கள் ஒன்றும் ஆனந்து இல்லையே?? ரத்த சகதியில் மூள்கி வலிமை காட்டும் மூர்க்கங்கள் ஆச்சே ?? அப்புறம் எப்படுடி சும்மா இருப்பாங்க ??


R K Raman
அக் 28, 2024 09:35

இஸ்ரேல் ஈரானைப் பிடிக்க விரும்பவில்லை. அதனால் அவரவர் தத்தம் வேலையைப் பாருங்கள். எல்லாம் நன்றாக இருக்கும் என்று ஈரான், லெபனான் போன்ற நாடுகளுக்கு செய்தி கொடுத்து விட்டார்கள்


முக்கிய வீடியோ