உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் பிரதமர் வீட்டில் 2வது முறையாக வெடிகுண்டு தாக்குதல்!

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் 2வது முறையாக வெடிகுண்டு தாக்குதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால், இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது 2வது முறையாக மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதனால் இஸ்ரேல் பிரதமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வருடங்களாக மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புகளை அழிக்கும் வரை அவர்கள் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த அக்.,16ம் தேதி இஸ்ரேலில் வடக்கு நகரமான சிசோரியாவில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் எந்த சேதமும் ஏற்படவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q3bhezps&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது, 2வது முறையாக மீண்டும் இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ட்ஸ் தெரிவித்தார். பிரதமர் வீட்டில் நடந்த தாக்குதலில் இரண்டு வெடிகுண்டுகள் அவரது தோட்டத்தில் விழும் சி.சி.டி.வி., காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் அதிபர் ஐசக் கார்க் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர், 'இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை 2வது முறையாக கொல்ல சதி நடந்துள்ளது. இதனால் பிரதமர் வீட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் உஷாராக உள்ளனர் என பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Duruvesan
நவ 17, 2024 13:55

இப்போ இஸ்ரேலி எங்க இருந்து ட்ரான் வந்ததோ அங்க புல்லு பூண்டு வரை கொள்ளுவான், மூர்கன் சொறிஞ்சி விட்டுட்டு நாளைக்கு ஒப்பாரி வெப்பான்


raja
நவ 17, 2024 13:14

பலஸ்தீனியன் என்று ஒருத்தன் உயிரோட இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிடானுவோ போல...


N.Purushothaman
நவ 17, 2024 11:33

சில தினங்களுக்கு முன்பு ஹமாஸ் அமைப்பினர் சொந்த மக்களை கொடுமை செய்து தாக்கும் காட்சிகள் எல்லாம் வெளியாகி உள்ளது .. பல அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாதிகள், அவர்களால் எங்கள் நிம்மதி பாதிக்கப்பட்டு பலரை இழந்து உள்ளோம் என்று ஆவேசமாக கூறி உள்ளனர். ஒரு வயதான பெண் சற்று ஒரு படி மேலே சென்று இஸ்ரேலிய வீரரை முத்தம் கொடுத்து அந்த பயங்கரவாதிகளை கொல்லுங்கள் என்று ஆவேசமாக கூறுகிறார் ...அப்பாவி பாலஸ்தீனிய பொதுமக்கள் படும் துயரம் கொடூரமானது ...


rajen.tnl
நவ 17, 2024 11:08

செய்ற தப்பு அனைத்தையும் செய்துட்டு பிறகு கதறுவானுங்க


முக்கிய வீடியோ