உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது புதிய வழக்கு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது புதிய வழக்கு

டாக்கா:மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சரின் பெயர்களை அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் இணைத்துள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து, அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இந்த சர்வதேச குற்ற தீர்ப்பாயம், 1971ல் வங்கதேச போருக்கு பின் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானால் துவங்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை விசாரிக்க துவங்கப்பட்ட இந்த அமைப்பு, பின் செயலிழந்தது.அதை முன்னாள் பிரதமரும், முஜிபுர் ரஹ்மான் மகளுமான ஷேக் ஹசீனா, 2010ல் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். தற்போது இந்த தீர்ப்பாயம் ஷேக் ஹசீனா வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி., ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்துள்ளது. இதன் விசாரணை முடிந்ததும் அதற்கான தண்டனை அறிவிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sekar ng
ஜூலை 11, 2025 10:21

பொருளாதார குற்றவாளிகலான வங்க தேச, மேற்குவங்கத்தினருக்கு எப்படி நோபல் பரிசு தந்தார்கள், அதிலும் ஊழலா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை