உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுற்றுலா பயணியர் வருகையை குறைக்க நார்வேயில் புதிய வரி

சுற்றுலா பயணியர் வருகையை குறைக்க நார்வேயில் புதிய வரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வே, உலகின் மிக அழகான இயற்கைக் காட்சிகள் நிறைந்த நாடுகளில் ஒன்றாகும். இதனால் ஆண்டுதோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் நார்வேவுக்கு படை எடுக்கின்றனர்.இவர்களால் நாட்டின் இயற்கைச் சூழல் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது. எனவே சுற்றுலா பயணியர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக சுற்றுலா வரியை, அடுத்தாண்டு ஜூனில் அறிமுகப்படுத்த உள்ளனர். அதன்படி தங்குமிடங்கள், கப்பல் பயணங்கள், மற்றும் பிற சுற்றுலா சேவைகளை பயன்படுத்தும் போது, கட்டணத்துடன் சேர்த்து 3 சதவீத சுற்றுலா வரி வசூலிக்கப்படும்.இந்த வரியால் கிடைக்கும் வருவாயை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்ளூர் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கழிப்பறை போன்ற பொது சேவைகளுக்கு பயன்படுத்த உள்ளனர்.இத்தாலி, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து போன்ற பிற ஐரோப்பிய நாடுகளின் பிரபல சுற்றுலா தலங்களில், ஏற்கனவே இது போன்ற வரி வசூலிப்பு நடைமுறையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜூன் 16, 2025 03:45

ஏற்கனவே மக்கள் தொகை குறைந்து கொண்டு வருவதால் குடிநுழைவை கண்டமேனிக்கு அதிகரித்தார்கள். அதன் அடிப்படையில் அரசு உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை ஏராளமாக கூடியது. இப்பொழுது அதை சரிக்கட்ட வேறு வித வரிகளை போட்டு மக்களை வாட்டுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை