உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு

அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா நாடு கடத்தப்பட்டான். அவன் இன்று அல்லது நாளை அதிகாலை தஹாவூர் ராணா இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன் லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தஹாவூர் ராணா. நம் அண்டை நாடான பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய இவன், அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டான்.அவன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறான். நாடு கடத்தக் கூடாது என்ற அவனது கோரிக்கையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது. நாடு கடத்தவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன.அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் நாடு கடத்த தேவையான உத்தரவுகளை பிறப்பித்து விட்டார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அவர் இன்று அல்லது நாளை அதிகாலை இந்தியா அழைத்து வரப்படுவார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்தியா வந்தவுடன் தஹாவூர் ராணா என்.ஐ.ஏ., அதிகாரிகள் கட்டுப்பாட்டில் ஒரு வாரம் இருப்பான். பின்னர் டில்லி மற்றும் மும்பையில் உள்ள சிறைகளில், ஏதாவது ஒரு இடத்தில் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்படுவான் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Copy Cat
ஏப் 10, 2025 16:56

தீவிரவாதிகள் என்ன செய்யவேண்டும்???


Tetra
ஏப் 09, 2025 20:29

தப்பி விடுவான்.எதற்கு சிறை? ஓசி சோறு போடவா? அட அவன் எந்த இறைக்காக பல நூறு பேரை கொன்றானோ அந்த இறையிடமே அனுப்பி வையுங்க


Thetamilan
ஏப் 09, 2025 19:15

தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ள மதவாத அரசு இதனால் தீவிரவாதம் குறைந்துவிடும் என்று மக்களை திசை திருப்புகிறது


Rasheel
ஏப் 09, 2025 17:51

கேடுகெட்ட தீவிரவாத கூட்டத்திற்கு பிரியாணி போட்டு பாதுகாப்பதை விட, கனம் அவர்கள் விரைவில் தண்டனையை நிறைவேற்ற vendum.


Rajan A
ஏப் 09, 2025 16:42

வருகிற வழியில் பிளேனிலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். என்ன சொன்னாலும் கேட்கவில்லை.பாராசூட் இன்றி தப்பித்து விட்டார்னு சொல்லி கதைக்கு முடிவு கட்டுவாங்களா!ஜெயில் செலவாவது மிச்சமாகும்...


எவர்கிங்
ஏப் 09, 2025 16:22

இனி அப்பீல் ஆப்பில் என 30வருஷம் இழுப்பானுக


Apposthalan samlin
ஏப் 09, 2025 16:08

சொல்லிகிட்டே தான் இருகான்வ கொண்டு வந்த பாடு இல்லை அதே போல் மலாயா நீரவ் மோடி இன்னும் இந்தியாவில் இருந்து தப்பித்தவர்கள் சொகுசாக வெளி நாடுகளில் வாழ்கிறார்கள் கொண்டு வந்த பாடு இல்லை


ஆரூர் ரங்
ஏப் 09, 2025 18:24

பாகிஸ்தான் இவன் மூலம் மும்பைத் தாக்குதல் நடத்தியது. இது தெரிந்தும் அப்போது சோனியா ஆட்சி எவ்வித பதிலடியும் கொடுக்கவில்லை. வாயே திறக்கவில்லை. இந்த பிஜெபி அரசு குற்றவாளிகளை ஒவ்வொருவராக தீர்த்துக் கட்டி வருகிறது. இதுதான் மூர்க்கன வெறுப்பாக்குது.


Thetamilan
ஏப் 09, 2025 15:24

ஏற்கனவே சிறையிதான் இருந்தார். உலகம் முழுவதும் இருந்து திரிலியன் டாலர் கொண்டுவரமுடிந்த மோடியால் இந்த ஒருவரை கொண்டுவரமுடியாதது ஏ ன் ?. திரிலியன் டாலரில் இவர்களின் பங்கும் உள்ளது .


KavikumarRam
ஏப் 09, 2025 16:58

சர்வதேச நீதி மன்றம் அதன் சட்ட விதிகள், அகதியா அடைக்கலம் புகுதல் அதன் சட்ட விதிகள்னு ஏராளமான விஷயங்கள் இதில் இருக்கு. உலகம் முழுவதும் இருந்து வர்த்தகத்துக்கு எவ்வளவு ட்ரில்லியன் டாலர் வேணாலும் கொண்டு வரலாம். அது கிரிமினல் சட்டவிதிகளுக்குள் வராது. வெறும் முரசொலி மட்டும் படிச்சா இவ்வளவு தான் மூளை வளர்ச்சி இருக்கும்.


Prasanna Krishnan R
ஏப் 09, 2025 15:01

Better kill him in America. Or if in India, he must be tortured every single day. Bastard pigs.


N Srinivasan
ஏப் 09, 2025 14:44

தமிழில் ஒரு பழமொழி உண்டு வேலியில் போகும் ஓணானை மேலே எடுத்து விட்டுக்கொண்டது போல அமெரிக்காவில் இருந்தவை கொண்டுவந்து ஜெயிலில் போட்டு ஒரு 5 வருஷம் கேஸ் போட்டு நடுவில் அவனுக்கு ஜாஸ்மின் கொடுத்து பத்திரமாக பாக்கிஸ்தான் அனுப்பிவைச்சு ........எதோ பண்ணுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை