உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினருக்கு அதிகரிக்கும் மவுசு; பொதுத்தேர்தலில் வாய்ப்பு அளிப்பேன் என்கிறார் பிரதமர் வோங்க்

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினருக்கு அதிகரிக்கும் மவுசு; பொதுத்தேர்தலில் வாய்ப்பு அளிப்பேன் என்கிறார் பிரதமர் வோங்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர்: ''மக்கள் செயல் கட்சி வரவிருக்கும்,பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியினரை வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கும்'' என சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்க் உறுதி அளித்துள்ளார்.சிங்கப்பூரில் 2020ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கட்சியின் 27 புது முகங்களில் இந்திய வேட்பாளர்கள் இடம்பெறவில்லை. 2024ம் ஆண்டு தரவுகளின் படி சிங்கப்பூர் மக்கள் தொகையில் இந்தியர்கள் 7.6 சதவீதமும், மலாய் மக்கள் 15.1 சதவீதமும், சீனர்கள் 75.6 சதவீதமும் உள்ளனர். விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மக்கள் செயல் கட்சி வரவிருக்கும், பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியினரை வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கும் என சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்க் உறுதி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் வணிகம், தொழில் உட்பட பல துறைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்திய வம்சாவளியினர் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், பொதுத் தேர்தலில் உரிய வாய்ப்பு வழங்கப்படும். சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்களின் பங்களிப்பு பெரியது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கலைஞர்
ஏப் 15, 2025 14:31

தமிழர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்துடாதீங்க...சிங்கப்பூரையே ஆட்டைய போட பார்ப்பாங்க


Tamil Inban
ஏப் 15, 2025 13:10

தமிழர்களுக்கு


sathu
ஏப் 15, 2025 11:00

அவர்கள் என்ன சாராயம், பிரியாணி & துட்டுக்காக ஓட்டு போடுபவர்கள்-னு நினைசீங்களா?


Iyer
ஏப் 15, 2025 10:05

உலகம் முழுவதும் சனாதனம் பரவும் நேரமும் வெகு அண்மையில் வரும். ஆப்பிரிக்கா, ஐரோப், அமெரிக்கா போன்ற நாடுகளில் ISCKON மூலம் கிருஷ்ண பக்தி பெருகி வருகிறது


Iyer
ஏப் 15, 2025 10:01

உலகையே இந்தியர்கள் ஆளும் நேரம் வெகு தொலைவில் இல்லை.


sankaranarayanan
ஏப் 15, 2025 09:14

திராவிட கட்சிகளை மட்டும் அங்கே அனுமதித்து விடாதீர்கள் எச்சரிக்கை சிங்கப்பூரே நாசமாகிவிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை