வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் போர் புரிவதில் மிகசிறந்த முன்னேற்றம்.
-நமது நிருபர்-அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக கத்தார், ஓமன் நாடுகளின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தொடர்பாக, நிருபர்களிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது: ஈரானுடனான தற்போதைய மோதலைத் தீர்ப்பதற்கான ராஜதந்திர முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. பேச்சுவார்த்தைகளில் எந்த திருப்பு முனையும் ஏற்படவில்லை. பல நாடுகள் பல்வேறு யோசனைகள் உடன் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாம் ஒரு திருப்புமுனையின் விளிம்பில் இருக்கிறோம் என்று நான் கூற மாட்டேன். சர்வதேசப் பிரச்னைகளை ராஜதந்திரத்தின் மூலம் தீர்ப்பதையே அதிபர் டிரம்ப் விரும்பினாலும், சாத்தியமற்ற நிபந்தனைகளின் கீழ் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்க முடியாது. ஈரானின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மட்டுமல்ல, சில சமயங்களில் அவை மூர்க்கத்தனமானவை, அபத்தமானவை, உண்மையிலேயே யதார்த்தமற்றவை. இவ்வாறு மார்கோ ரூபியோ கூறினார்.
அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் போர் புரிவதில் மிகசிறந்த முன்னேற்றம்.