உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதத்தை ஒடுக்க சர்வதேச நாடுகளுக்கு கோரிக்கை : பிரதமர்

பயங்கரவாதத்தை ஒடுக்க சர்வதேச நாடுகளுக்கு கோரிக்கை : பிரதமர்

ஐக்கிய நாடுகள் : பயங்கரவாதத்தை, சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து இரும்புக்கரம் ஒடுக்க முன்வர வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா., சபை பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சர்வதேச நாடுகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது, பயங்கரவாதம் என்பது தனிநாட்டுப் பிரச்னை அல்ல, அது சர்வதேச அளவில் எங்கும் பரவி வியாபித்துள்ளது. பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எந்த நாடும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று மறைமுகமாக பாகிஸ்தானை, மன்மோகன் சிங் சாடினார். ஏனெனில், ஒருநேரத்தில், அதுவே அவர்களுக்கு பேராபத்தில் கொண்டு முடியும் என்று பாகிஸ்தானிற்கு அவர் எச்சரிக்கையும் விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை