உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவிற்கு உதவ 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு

ரஷ்யாவிற்கு உதவ 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சீயோல்: உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யாவிற்கு உதவுவதற்காக 3 ஆயிரம் வடகொரியா ராணு வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா, அணு ஏவுகணை சோதனைகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. வடகொரியாவும், ரஷ்யாவும் நட்புறவு நாடுகளாக உள்ளன. வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் இருவரும் பல முறை சந்தித்து நட்புறவை வளர்த்துக்கொண்டனர்.இந்த சூழ்நிலையில் தென்கொரியா பார்லிமென்ட் எம்.பி. பார்க்- சன்வொன், உளவுத்துறை அறிக்கையை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனுடன் போரிட்டு ரஷ்யாவிற்கு உதவுவதற்காக 12 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளது.முதற்கட்டமாக 3 ஆயிரம் வடகொரிய ராணுவ வீரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில் கூடுதலாக 1500 வடகொரியா ராணுவ வீரர்கள் ரஷ்யாவிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். வரும் டிசம்பருக்குள் 10 ஆயிரம் வட கொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட உள்ளனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Venkatesan Ramasamay
அக் 24, 2024 10:23

ஆம் , இப்படித்தான் இருக்கனும் இந்தநாடு அந்தநாடுமீது குண்டைத்தூக்கி பொடுறதும் அந்தநாடு இந்தநாட்டுமீது குண்டைத்தூக்கி போடுறதும் ... ம்ம் சீக்கிரம் சீக்கிரம் இந்த பூமி ரொம்பநாளா சுத்திகிட்டு இருக்கு இந்த பிரபஞ்சத்துல சீக்கிரம் அழித்துவிட்டு புதிய பூமியை உருவாக்குவோம்


Jagan (Proud Sangi)
அக் 23, 2024 23:20

என்ன இது பிச்சைக்காரர்கள் போர் மாதிரி இருக்கு. எடுக்குறேதே பிச்சை இதில் இன்னோர் பிச்சைக்காரனுக்கு உதவியா ?


Arumugam Saravanan
அக் 23, 2024 22:30

தலைவர்களை மரியாதை குறைவாக கூறாதே


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 24, 2024 00:29

கூறாதே என்பது உங்கள் அகராதியில் மரியாதையைக் குறிக்கும் சொல்லா ????


Ramesh Sargam
அக் 23, 2024 19:58

தமிழ் நாட்டு மெண்டல் உதய நிதி. இந்தியா அளவில் மெண்டல் ராகுல் காந்தி. அதுபோல வடகொரியா மெண்டல் இந்த கிம்ஜோங் உன் .. இந்திய பிரதமர் போரிடும் நாட்டு தலைவர்களிடையே தனித்தனியாக பேசி போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்யும் இந்த நேரத்தில், இந்த வடகொரியா மெண்டல் ரசியாவிற்கு வீரர்களை அனுப்பி போரை தொடர முயற்சி செய்கிறது.


ராமகிருஷ்ணன்
அக் 24, 2024 09:25

கிம் ஜாங் குடன் ஒப்பிட்டு பெருமை படுத்தி விட்டீர்கள்


yts
அக் 23, 2024 19:48

old news


ganapathy
அக் 23, 2024 19:27

வெரி குட்


முக்கிய வீடியோ