உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பியாங்யாங்: வட கொரிய அரசுக்காக வேலை செய்பவர்கள் என கருதப்படும் 'ஹேக்கர்' எனப்படும் இணையத் திருடர்கள், 'கிரிப்டோகரன்சி' திருட்டில் புதிய சாதனை படைத்துள்ளது தெரிய வந்துள்ளது. உலகம் முழுதும் கிரிப்டோகரன்சி என்படும் மெய்நிகர் நாணயம் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இதில் பல மோசடிகளும் நடக்கின்றன. அந்த வகையில், ஆசிய நாடான வட கொரியா, இந்த கிரிப்டோ திருட்டில் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. 'லாசரஸ் குரூப்' எனும் பெயரில் அறியப்படும் இந்த ஹேக்கர்கள், கிரிப்டோ நிறுவனங்களின் வலைதளங்களை ஹேக் செய்து, கரன்சியை திருடி வட கொரியாவின் ஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு நிதி அளிப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த லாசரஸ் குழு கடந்த பிப்ரவரியில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயை தளமாகக் கொண்ட 'பைபிட்' என்ற கிரிப்டோ வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்து, 13,000 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர். இந்த ஆண்டில் இதுவரை, 30க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை லாசரஸ் குழு நடத்தியுள்ளது. அவர்கள் திருடிய கிரிப்டோகரன்சியின் மதிப்பு, 16,800 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டு திருடப்பட்ட 5,535 கோடி ரூபாயை விட மூன்று மடங்கு அதிகமாகும். திருடப்பட்ட கிரிப்டோகரன்சி, வடகொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் வரை பங்களிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த, 2017 முதல் இந்த லாசரஸ் குழு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கிரிப்டோ கரன்சி கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

yasomathi
அக் 09, 2025 15:35

அமெரிக்கன் எப்பவுமே பொய் சொல்லிட்டு ஒரு தவறான தகவலை வெளி உலகுக்கு பரப்பி அந்த நாட்டின் மக்கள் மீது தவறான விமர்சனங்கள் வைத்து தனிமை படுத்தும் ஒரு குள்ள நரி. அப்படியென்றால் தன்னிடம் டெக்னாலஜி இல்லை என்று கூறி விடு...


mohan
அக் 09, 2025 09:58

கிரிப்டோ சுர்ரெனசி என்பது உலக சூதாட்டம். சாதாரண மக்கள், இதில் தெரியாமல், முதலீடு செய்ய வேண்டாம்..


கிம் பாபு
அக் 09, 2025 09:55

ஒரே அட்டாக் தான். மொத்த தேசத்தையும் உருவிக்கப் போறாங்க.


சாமானியன்
அக் 09, 2025 08:46

சிகரெட், மது, தாசி, கஞ்சா, ஆல் லைன் கேம் மாதிரி கிரிப்டோ பக்கம் போயிடாதீங்க. ஆரம்பத்தில் நன்றாகத் தான் இருக்கும். பிறகு பைத்தியம் ஆய்விடுவீங்க.


தியாகு
அக் 09, 2025 07:27

வடகொரியா ஹேக்கர்களுக்கு கொஞ்சமும் விவரம் பத்தல, நம்ம கட்டுமர திருட்டு திமுகக்காரர்களை கேட்டால் கஷ்டப்பட்டு மூளையை உபயோகிக்காமல் ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் ஈஸியா பணத்தை எப்படி ஆட்டையை போடுவது என்று சொல்லிக்கொடுப்பார்கள்.


தலைவன்
அக் 09, 2025 12:03

திமுகபோபியா மோசமான வியாதி உடனே வைத்தியம் பார்த்துக்கொள் உடன்பிறப்பே?? இல்லையேல் கீழ்பக்கத்தில்தான் சேர்க்க நேரிடும்.


Mahendran Puru
அக் 09, 2025 06:36

சதுர மண்டையன் தேசத்தில் இந்த வேலையும் நடக்கிறதா?


முக்கிய வீடியோ