உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ‌பயங்கரவாதத்தினை முறியடிக்க இந்தியாவிற்கு ஒத்துழைப்பு: ஒபாமா

‌பயங்கரவாதத்தினை முறியடிக்க இந்தியாவிற்கு ஒத்துழைப்பு: ஒபாமா

வாஷிங்டன்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது கண்டிக்கத்தக்கது. வர்த்தக நகரமான மும்பையில் நேற்று தொடர் குண்டுவெடித்தது. இதில்20 பேர் பலியாயினர். 140 பேர் காயமடைந்தனர் .இத்தகைய தீய சதி செயல்களை இந்தியா முறியடித்து வெற்றி பெரும் என நான் நம்புகிறேன். கடந்த முறை நான் இந்தியா வந்த போது 2008- நவம்பர் 26-ம் தேதி நடந்த மும்பை தாக்குதல்நடந்த இடத்திற்கு சென்றேன். இந்த சம்பவத்திற்கு பின்னரும், அங்கு இந்தியர்கள் எவ்வளவு மிகவும் தைரியமான மன நிலையில் இருந்ததை பார்த்தேன். இப்போது மீண்டும் அதே ‌கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பலியானவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் நலம் பெற வேண்டுகிறேன். இந்த ‌பயங்கர சம்பவத்தினை அமெரிக்க உன்னிப்பாக கவனித்து வருகிறது. எனினும் இந்த கொடிய செயல்களை செய்தவர்களை சமாளித்து இந்தியா ‌ இந்தியா நிச்சயம் வெற்றி‌ பெறும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதற்கு அமெரிக்கா இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இவ்வாறு ஒபாமா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி