விவாகரத்து வதந்திக்கு ஒபாமா முற்றுப்புள்ளி
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமாவுடன் விவாகரத்து செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளுக்கு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.அமெரிக்காவின் 44வது அதிபராக 2009 முதல் 2017ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தவர் பாரக் ஒபாமா. இவரது மனைவி மிச்செல் ஒபாமா. இந்த தம்பதிக்கு மலியா ஒபாமா மற்றும் சாஷா ஒபாமா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பாரக் ஒபாமாவும் மிச்செல் ஒபாமாவும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.சமீபத்தில், முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் அரசு இறுதிச் சடங்கில் மிச்செல் கலந்து கொள்ளாததாலும், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்போர் பட்டியலில் மிச்செல் இல்லாததாலும், இந்த ஜோடியின் உறவு மற்றும் விவாகரத்து பற்றிய வதந்திகள் மேலும் பரவின.இந்நிலையில் மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒபாமா பதிவிட்டுள்ளதாவது:என் வாழ்க்கையின் காதலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்கள் ஒவ்வொரு அறையையும் அரவணைப்பு, ஞானம், நகைச்சுவை மற்றும் கருணையால் நிரப்புகிறீர்கள் . அதைச் செய்வதில் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். வாழ்க்கையின் சாகசங்களை உங்களுடன் எடுத்துக்கொள்ள முடிந்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. உன்னை நேசிக்கிறேன் என்று பதிவிட்டு ஒபாமா தம்பதியர் உணவருந்தி புன்னகைத்துள்ள போட்டோவை பதிவிட்டுள்ளார்.இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு ஒபாமா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.