உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 447 பில்லியனின் புதிய வேலைவாய்ப்புகள்: ஒபாமா

447 பில்லியனின் புதிய வேலைவாய்ப்புகள்: ஒபாமா

வாஷிங்டன்: 447 பில்லியன் டாலர் செலவில் புதிய வேலைவாய்ப்புத்திட்டம் ஒன்றினை அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி பேசினார். இது குறித்து அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸில் அதிபர் ஒபாமா பேசியதாவது: அமெரிக்காவில் வேலையில்லா தி்ட்டாத்தால் பல லட்சம் பேர் பக்கத்து நாடுகளுக்கு இடம்செல்கின்றனர். தற்போது இவற்ற‌ை ‌போக்குவது முக்கியமான தருனமாக உள்ளது. நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகிறது. முன்னதாக பெரும் கடன்சுமையிலிருந்து அமெரிக்கா மீண்டுள்ளது. இருப்பினும் தற்போது 447 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்க வேலைவாய்ப்பு சட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளேன். இதன் மூலம் கட்டுமானத்துறை, ஆசியர் பணியிடம் உள்ளிட்டவைகளில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் மீது வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கலாம். இவ்வாறு ஒபாமா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை