உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கோரிக்கைகளை நிறைவேற்ற ஆக்கிரமிப்பு காஷ்மீர் குழு கெடு

கோரிக்கைகளை நிறைவேற்ற ஆக்கிரமிப்பு காஷ்மீர் குழு கெடு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அடுத்த 48 மணி நேரத்துக்குள் 38 அம்ச கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசு நிறைவேற்றாவிட்டால், மிகப்பெரிய மற்றும் இறுதிகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக போராட்டக் குழு எச்சரித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜே.ஏ.ஏ.சி., எனப்படும் கூட்டு அவாமி போராட்டக் குழு, இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்துகிறது. 'ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் உட்பட 38 அம்ச கோரிக்கைகளை அடுத்த 48 மணி நேரத்துக்குள் பாகிஸ்தான் அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய அளவில் இறுதிகட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்படும்' என, போராட்டக் குழு எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி