உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை உயர்கிறது!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை உயர்கிறது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது.இஸ்ரேலுக்கும் மற்றும் பாலஸ்தீனைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த ஓராண்டாகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறியுள்ளார். இஸ்ரேல் படையினர் காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.இந்நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது. கச்சா எண்ணெய் விலை 1%க்கும் அதிகமாக உயர்ந்தன. இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:இஸ்ரேலின் தலைமை அத்தகைய தாக்குதலை நடத்த இறுதி முடிவை எடுத்திருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது பற்றிய தகவல்களால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 1 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். விலையும் தாறுமாறாக உயரும். இதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
மே 21, 2025 23:29

மத்திய அரசு இதையே காரணம் காட்டி இஷ்டத்திற்கு பெட்ரோல் விலையை ஏற்றி விடலாம்!


RAVINDRAN.G
மே 21, 2025 11:52

இன்னும் இந்தியா மாற்று எரிசக்திக்கு மாற வெகுகாலம் பிடிக்கும்போல தெரிகின்றது . சீனாவில் பெரும்பாலும் பாட்டரி மூலம் இயங்கும் கார் மற்றும் பைக் அதிகம். அதற்கான லித்தியம் அவர்கள் நாட்டிலே கிடைக்கிறது. தற்சார்பு உள்ள நாடாக சீனா மாறிவிட்டது. ஆகவே இந்தியாவும் இந்தமாதிரி தற்சார்பு அடையவேண்டும். கச்சா எண்ணெய் வாங்குவதால் நம்முடைய அந்நிய செலாவணி அதிகமாக குறைகின்றது. இது இந்தியாவின் பொருளாதார நிலையை பாதிக்கும். மேலும் சீனா போல நீர்வழி தடங்களை அதிகம் பயன்படுத்தும்போது எரிபொருள் செலவு குறையும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி குறையும் தொழிற்ச்சாலைகளில் உற்பத்தி ஆகும் அடக்க விலை குறைவதால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். பணவீக்கம் கணிசமாக குறையும். கச்சா எண்ணெய் முடிந்தவரை இறக்குமதி செய்வதை இந்தியா அரசு படிப்படியாக குறைக்கவேண்டும்.


djivagane
மே 21, 2025 11:52

பாக்கிஸ்தான் இஸ்ரேல் அணு ஆயுதம் வெய்திருக்குது ஏன் ஈரான் வெய்திருக்க கூடாது?


MUTHU
மே 21, 2025 11:25

ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்தால் அமெரிக்காவிற்கு என்ன? பாகிஸ்தானே அணு ஆயுதம் வைத்துள்ளது. இதனை பொதுவாக எல்லோரும் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாடு என்று தான் நினைப்பார்கள். ஆனால் சவுதிக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாடு தான் இது. சவூதி ஆயில் உற்பத்தி மற்றும் விலை இதன் மூலம் நிலைப்படுத்தப்படுகின்றது. ஈரானின் எண்ணைய் சந்தைக்குள் அதிகளவு வந்துவிட்டால் சவூதி ஆயில் விலை குறைந்துவிடும்.


கண்ணன்
மே 21, 2025 11:15

இது அமெரிக்கா அவிழ்த்துவிடும் பொய்யாகத் தெரிகிறது நாடுகளும் கச்சா எண்ணெய்ச் சுத்திகரப்புக் கம்பெனிகளும் அதிர்ச்சியடைந்து panic buying செய்யாமல் இருப்பது நல்லது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை