காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு; ஐ.நா., அதிர்ச்சி தகவல்!
ஜெருசலேம்: 'காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐ.நா., அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது,.காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் இன்னமும் ஓயவில்லை. எங்கு நோக்கிலும் குண்டு சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்க, போரின் விளைவுகள் குறித்து உலக நாடுகள் அதீத கவலை தெரிவித்து வருகின்றன. காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 45,338ஆக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுகின்றனர். குழந்தைகள் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வருகின்றனர். குழந்தைகளைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. உயிர் பிழைத்தவர்கள் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் காயம் அடைந்துள்ளனர். இதுவரை 14,500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் தங்கள் வாழ்க்கை, எதிர்காலத்துக்கான நம்பிக்கை இழக்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.'பிணைக்கைதிகளை நாங்கள் கைவிடமாட்டோம். மீட்கும் வரை நாங்கள் போரை நிறுத்த மாட்டோம் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.