உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஷாங்காய் மாநாட்டு கூட்டறிக்கை: கையெழுத்திட இந்தியா மறுப்பு!

ஷாங்காய் மாநாட்டு கூட்டறிக்கை: கையெழுத்திட இந்தியா மறுப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காததால் இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.சீனாவின் கிங்டோவோ நகரில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்த மாநாட்டில் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்பட 10 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்று உரையாற்றினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r2vigedy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அடைக்கலம்

இந்த மாநாட்டில், ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் என்பது மே 7ம் தேதி தொடங்கப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இது பாகிஸ்தானில் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களைத் தடுப்பது மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. பயங்கரவாத செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கைக் கருவியாகப் பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. அத்தகைய நாடுகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு விமர்சிக்கத் தயங்கக்கூடாது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.பயங்கரவாதத்தின் மையப்பகுதிகள் இனி பாதுகாப்பாக இல்லை என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். மேலும் அவற்றை குறிவைக்க நாங்கள் தயங்க மாட்டோம்.

நீதி முன் நிறுத்தணும்

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட கண்டிக்கத்தக்க பயங்கரவாதச் செயல்களுக்குக் காரணமானவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், நிதியுதவி செய்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களைப் பொறுப்பேற்று நீதியின் முன் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியா மறுப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து குறிப்பிடாததாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை அறிக்கை பிரதிபலிக்கவில்லை எனக் கூறியும் கையெழுத்திட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். பலுசிஸ்தான் பிரச்னையைக் குறிப்பிட்டு, அப்பகுதியில் இந்தியா அமைதியின்மையை உருவாக்குவதாக மறைமுகமாக அறிக்கை குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பலுசிஸ்தான் சுதந்திரப் போராட்டத்துக்கும் இந்தியாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று பாகிஸ்தானின் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜூன் 26, 2025 18:35

எதுக்கு போகணும்? அவிங்க எறங்கி வரட்டும்.


அசோகன்
ஜூன் 26, 2025 18:02

நிமிர்ந்து நிற்கும் இந்தியா...... தேவைப்பட்டால் ஷாங்காய் கூட்டமைப்பில் இருந்தே வெளியேறலாம்..... பக்கிஸ்தான் சைனா மட்டும் இருக்கட்டும்


Thravisham
ஜூன் 26, 2025 15:19

ஒரு இத்தாலிய மாபியா குடும்பமும் சீன தலைமையும் கையெழுத்து போட்டது அந்த காலம்


GMM
ஜூன் 26, 2025 14:09

பாகிஸ்தான், வங்கதேசம் ஆக்கிரமிக்கப்பட்ட நில பகுதிகள். அவை நாடு அல்ல. பயங்கர வாத செயலை கண்டிக்காத கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. மறுப்பு சரியே.


Sekar
ஜூன் 26, 2025 13:38

மிக்க நன்று. நமது நாட்டின் பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாத மற்றும் பாரபட்சம் காட்டும் ஒரு அமைப்பில் நாம் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை.


சமீபத்திய செய்தி