உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் காலிஸ்தானியர்களுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ஹிந்துக்கள், சீக்கியர்கள் போராட்டம்

கனடாவில் காலிஸ்தானியர்களுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ஹிந்துக்கள், சீக்கியர்கள் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவில் ஹிந்துக் கோயிலில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து, ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள ஹிந்துக் கோயிலில் இருந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து பிராம்ப்டன் நகரில் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஹிந்துக்களும், சீக்கியர்களும் அடக்கம். இது அங்கு சிறிய அளவில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இரு சமுதாயத்தினர் ஒன்று சேர்ந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கனடாவில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை ஹிந்துக்கள் யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.பிராம்ப்டன் நகரில், ஹிந்து சபை கோயிலுக்கு ஆதரவாக, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மற்றொரு பேரணியும் இதற்கு முன்பு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Chandramohan
நவ 06, 2024 16:43

சீக்கிய சமூகம் உருவானதன் காரிய தூண்டுதலையும்.... குரு கோவிந்த் சிங் யாருக்கு எதிராக அவர்களுக்கு வீரத்தை கற்பித்தார் என்பதையும் உணராத அல்லது உணர்வில்லாதோரே காலிஸ்தான் ஆதரவாளர்கள்...


Kasimani Baskaran
நவ 06, 2024 05:43

திருவாளர் டிரூடோ பதவியில் இருக்கும்வரையா சீக்கிய காலிஸ்தானிகள்தான் அங்கு ஆட்சியில் பங்கு பெரும் முதலாளிகள். அவர் பதவி விலகினால் ஒருவேளை நிலைமை மாறலாம். அது வரை போராட்டம் செய்பவர்களை வேண்டுமானால் உள்ளே தூக்கி வைப்பார்களே அன்றி தீவிரவாதிகளை அல்ல.


J.V. Iyer
நவ 06, 2024 05:07

காலிஸ்தான் கேட்பது ஒரு இரண்டு விழுக்காடு சீக்கியர்கள்தான். இந்த பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் கையில் சிக்கி இருக்கிறார்கள் மற்ற சீக்கியர்கள். பாவம். இதற்கு துணைபோகும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ. ஓரிரு வருடங்களுக்கு முன்பு G20 மாநாட்டிற்கு இவர் இந்தியா வந்தபோது இவர் வந்த விமானம் கோளாறு என்று இரண்டு நாட்கள் டெல்லி ஹோட்டலில் தங்கி இருந்தார். இதற்கு காரணம் இவர் வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தியதற்காகத்தான் என்று சொல்லுகிறார்கள். உண்மையா?


Ramesh Sargam
நவ 05, 2024 22:18

காலிஸ்தான் தீவிரவாதிகள் கனடா நாட்டிற்கு பேராபத்து ஏற்படுத்துவார்கள். ஆகையால் அவர்களை கனடா அரசு பிடித்து சிறையில் அடைக்கவேண்டும் வாழ்நாள் முழுவதும்.


சமீபத்திய செய்தி