உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிந்துக்களுடன் ஒத்து போகாது பாக்., ராணுவ தளபதி பேச்சு

ஹிந்துக்களுடன் ஒத்து போகாது பாக்., ராணுவ தளபதி பேச்சு

புதுடில்லி ''வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்திலும், ஹிந்துக்களுடன் நாம் வேறுபட்டவர்கள். இதை உணர்ந்தே முஸ்லிம்களுக்கு என தனி நாடு உருவாக்கப்பட்டது,'' என, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் பேசியுள்ளார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில், வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் பேசியதாவது:நீங்கள் அனைவரும் பாகிஸ்தானின் துாதர்கள். நம் நாட்டின் உயர்ந்த கொள்கைகள், கலாசாரத்தை மறக்கக்கூடாது. உங்கள் குழந்தைகளுக்கு, நம் நாட்டின் வரலாற்றை கற்றுத் தாருங்கள். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், ஹிந்துக்களிடம் இருந்து நாம் வேறுபட்டவர்கள். இதை, நம் முன்னோர்கள் உணர்ந்தனர். நம் மதம், நம் பழக்க வழக்கங்கள், நம் பாரம்பரியங்கள், சிந்தனைகள், எண்ணங்கள் என அனைத்தும் வேறுபட்டவை. அதுவே, இரண்டு நாடுகள் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது.சுதந்திரப் போராட்டத்தின் இறுதி கட்டத்தில் ஒரே நாடாக இருக்க முடியாது என்பதை நம் முன்னோர்கள் உணர்ந்தனர். அதனாலேயே தனி நாடு உருவாக போராடினர்; இதற்காக பல தியாகங்களை செய்தனர். நம் நாடு உருவானதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்கு சொல்லி கொடுங்கள். நம் நாட்டுடனான பிணைப்பை எப்போதும் விட்டுவிடக் கூடாது.ஜம்மு - காஷ்மீர் என்பது, நம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக எடுத்துச் செல்லும் நரம்பு போன்றது. அதை நாம் மறக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் நம் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காஷ்மீரில் உள்ள நம் சகோதரர்களை கைவிட மாட்டோம்.பயங்கரவாத நடவடிக்கைகளால் தான், நம் நாட்டுக்கு முதலீடுகள் கிடைக்கவில்லை என்று பலரும் கூறுகின்றனர். பயங்கரவாதிகள் நம் வளர்ச்சியை தடுத்து விட முடியும் என்று நினைக்கிறீர்களா?. 13 லட்சம் பேர் கொண்ட வலுவான இந்திய ராணுவத்தாலேயே, நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை. பயங்கரவாதிகளால் முடியுமா?. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்.பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் இந்த பேச்சு, முஸ்லிம்களின் பாதுகாவலனாக அந்த நாடு உள்ளதாக காட்டிக் கொள்வதாகவே அமைந்துள்ளது. மேலும், இங்குள்ள முஸ்லிம்களை துாண்டிவிடுவது போல் அமைந்துள்ளதாக வெளியுறவுத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மத்திய அரசு எதிர்ப்பு!

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் பேச்சுக்கு, நம் வெளியுறவுத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:மற்றொரு நாட்டில் உள்ள பகுதியை, தன் நாட்டின் நரம்பு என்று எப்படி கூற முடியும்? ஜம்மு - காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி. அதற்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள ஒரே தொடர்பு, அந்த நாட்டினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியே. மற்றபடி, ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Rasheel
ஏப் 19, 2025 12:39

அவன் எங்கே மற்றவர்களுடன் ஒற்றுமையாக வாழ்கிறான்? உனக்கு பிரியாணி விற்று விட்டு உன்னையே பிரியாணி செய்து விடுகிறான். அதுதானே பாகிஸ்தானைய பங்களாதேஷிகளின் உண்மை நிலை.


G Sundar
ஏப் 19, 2025 02:52

இந்துக்களை மட்டுமா வேறு என்கிறீர்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளிடமிருந்தும் மதங்களில் இருந்தும் நீங்கள் வேறுபடுகிறீர்கள் ஹமாஸின் கொள்கையும் அதுதான் வளைகுடா நாடுகளுக்கு பிச்சைகாரர்களை நீங்கள் ஏற்றுமதி செய்கிறீர்கள் உங்களின் கொள்கையை தெளிவாக கூறியதற்கு நன்றி


Balakrishnan karuppannan
ஏப் 18, 2025 19:49

துலுக்கன் எப்பவும் துலுக்கன் தான். அவர்களால் இந்திய இறையாண்மைக்கு என்றுமே குந்தகம் தான்..


Prasanna Krishnan R
ஏப் 18, 2025 14:10

மிக்க நன்றி. எல்லா முஸ்லிம்களும் விரும்பினால் பாகிஸ்தானுக்குப் போகலாம்.


ராமகிருஷ்ணன்
ஏப் 18, 2025 12:08

அதாவது பாகிஸ்தானுக்கு பிச்சை போடுபவர்களை நண்பர்கள் என்றும், பிச்சை எடுக்க வைப்பவர்களை விரோதிகளாக பார்க்கிறார்கள். அப்படி என்றால் தவறில்லை.


Padmasridharan
ஏப் 18, 2025 12:04

ஒரு அல்லாஹ், எல்லா உயிரினங்களையும் படைத்தவர் என்று நம்புவர்கள் உயிர் உள்ளவர்களையும், உயிர் இல்லாதவற்றையும், மதிப்பார்கள்..


Rasheel
ஏப் 19, 2025 12:41

வங்காளத்தில் நடந்ததை பெண் என்ற முறையில் பார்த்தீர்களா?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 18, 2025 11:52

இதைத் தவிர மத்திய அரசால் வேறு என்ன செய்து விட முடியும். கண்டனம் தெரிவிப்பதையே குலத்தொழிலாக வைத்திருக்கும் இந்தியாவிற்கு அடுத்த முறை இந்துக்களையோ, இந்திய ராணுவத்தையோ, அல்லது இந்தியாவை பற்றி எதிர்த்து பேச பயப்படும்படி நடவடிக்கை எடுக்கவே திராணி இல்லை என்பதே நிதர்சனம்....!!!


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 18, 2025 10:36

ஹிந்துக்கள் உடன் ஒத்து போக முடியதா முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு வரச் சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்.


ராமகிருஷ்ணன்
ஏப் 18, 2025 10:26

இந்துக்கள் மட்டுமின்றி உலகில் வேறு எந்த மதத்தினருடனும் ஒத்துப் போகாது, மற்ற பிரிவினருக்கும் ஒத்துப் போகாது.


c.mohanraj raj
ஏப் 18, 2025 10:24

ஓட்டுக்காக சிறுபான்மையினர் என்ற போர்வையில் இருப்பவர்களை தாஜா செய்து அழகே நீங்கள் பெரிய ஆளாக கருதப்படுகிறீர்கள் சோத்துக்கு பிச்சை எடுக்கும் நபர்களாகவே நாங்கள் கருதுகிறோம் பாகிஸ்தானியர்களை


முக்கிய வீடியோ