உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்பை வாழ்த்திய பாக்., பிரதமர்; குறிப்பு வெளியிட்டு மானத்தை வாங்கிய எக்ஸ்!

டிரம்பை வாழ்த்திய பாக்., பிரதமர்; குறிப்பு வெளியிட்டு மானத்தை வாங்கிய எக்ஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார்; அவரே தடை செய்துவிட்டு, தடையை மீறி அவரே பதிவிட்டுள்ளதாக எக்ஸ்தளம் குறிப்பு வெளியிட்டு மானத்தை வாங்கியது.இந்த ஆண்டின் துவக்கத்தில் தேசிய பாதுகாப்பு பிரச்னைகளை காரணம் காட்டி, எக்ஸ் சமூகவலைதளத்திற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. பயங்கரவாதிகள் தங்கள் தேசவிரோத செயல்களுக்கு, எக்ஸ் சமூகவலைதளத்தை பயன்படுத்துவதாகவும் அரசு குற்றம் சாட்டியது.இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு, எக்ஸ் சமூக வலைதளத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்தார். அவர் வாழ்த்து செய்தியில்,' வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள டிரம்புக்கு வாழ்த்துகள். இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன்' என குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அந்த வாழ்த்துப் பதிவில் எக்ஸ் தளம் சார்பில் கம்யூனிட்டி நோட் வெளியிடப்பட்டது. அவரே பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தை தடை செய்துவிட்டு, தடையை மீறி பதிவும் வெளியிட்டுள்ளதாக எக்ஸ் தளம் குறிப்பு வெளியிட்டது. விபிஎன் மூலம் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி உள்ளதாகவும், தடையை மீறியதால், அவர் ஒரு கிரிமினல் என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு எதிராக இணையதளத்தில் விமர்சனம் கிளம்பி உள்ளது. எக்ஸ் பயனர்கள் பலரும், 'பாசாங்குத்தனத்திற்கு மனித முகம் இருந்தால், அது ஷெபாஸ் ஷெரீப் தான்' என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.இதற்கிடையில், பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் கூறியதாவது: 'பாகிஸ்தானும் அமெரிக்காவும் பழைய நண்பர்கள் மற்றும் பங்காளிகள். அமெரிக்காவுடனான எங்கள் உறவு பல தசாப்தங்களாக உள்ளது. மேலும் அனைத்து துறைகளிலும் பாகிஸ்தான்-அமெரிக்கா இடையே உறவை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்'. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Anand
நவ 09, 2024 17:51

பக்கிகளுக்கு மானம் எல்லாம் இருக்கா?


Sivagiri
நவ 09, 2024 17:39

எங்கள் கண்களை பிடுங்கி எதிரிக்கு வையுங்கள் - என்று காட்டிக் கொடுக்கும் காங்கிரஸ் கம்பெனியின் , கதை முடிந்து விட்டது , - இங்கே இருந்து பாகிஸ்தானுக்கு கியாரண்டி கையெழுத்து போட்ட காங்கிரஸ் கம்பெனி , திவாலாகும் நிலையில் உள்ளது


நிக்கோல்தாம்சன்
நவ 09, 2024 15:28

அனால் இந்த செய்தியில் அவருடைய கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு சொல்லியிருக்காரு , anyways தமிழக பாகிஸ்தானியர்களுக்கும் இவருக்கும் எவ்வளவு ஒற்றுமை


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 09, 2024 16:57

பாகிஸ்தான் அங்கே கட்டளையிடுவதை இந்திய மூர்க்கமும், திராவிடமும் இங்கே நிறைவேற்றும் .....


Barakat Ali
நவ 09, 2024 14:43

பைடன் இதுவரை இந்த ராப்பிச்சைக்கு மிஞ்சிப்போன வெறும் சோறு மட்டும் போட்டுக்கிட்டு இருந்தாரு ..... இப்படி இவர் வாழ்த்துவதால் கூடவே பழைய சாம்பாராவது ட்ரம்ப் ஊற்ற மாட்டாரா ????


Srinivasan K
நவ 09, 2024 16:10

no choice already free lunch coupons given to migratnts, illegal migrants withdrawn in new York after this election Trump is no fool, no free money, war assistance, cia/fbi getting shaken. pak is going to be in deep trouble


கடுகு
நவ 09, 2024 14:05

டிரம்பர் உங்களையும், உங்க நாட்டையும் மதிக்க மாட்டார். முட்டுச்சந்துல போய் கதறு.


Kumar Kumzi
நவ 09, 2024 13:06

மூனு வயதிலேயே அனுப்பி கொர்ர்ர்ரானை படிக்க வைத்து மூளை சலவை செய்தல் எப்படி அறிவு வளரும்


அப்துல்லா உமர், பெனாங்
நவ 10, 2024 06:05

சரியான பக்கிப்பய, எக்ஸ் பக்கம் இல்லாத மானத்தையும் சேர்த்து வாங்கிடுச்சு. நம்ம பசங்களுக்கு வெக்கம், மானம்தான் இல்லன்னு நெனச்சா, மூளையுமா இல்ல, சே.


SUBRAMANIAN P
நவ 09, 2024 12:53

தடை போட்டதும் ஒரே ஆளு அதை மீறுவதும் ஒரே ஆளா? அந்நியன் கதை மாதிரி இருக்கு


SUBRAMANIAN P
நவ 09, 2024 12:52

மகா மக்கு மண்ணாந்தையா இருப்பாரா ஒரு பிரதமர்? அது பாக்கி பிரதமர்தான். பாக்கி மக்களுக்காவது இனிமேல் புத்தி வருமா? இதுக்கு இங்குள்ள முட்டு களப்ஸ் என்ன SOLRANGA?


Parameswar Bommisetty
நவ 09, 2024 12:23

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு இப்படி தான் இருக்கும். பயங்கரவாத நாடு பாக்கிஸ்தான்


Ramesh Sargam
நவ 09, 2024 12:15

என்னதான் trumppukku வாழ்த்து தெரிவித்தாலும், டிரம்ப் பாகிஸ்தானை ஒருக்காலும் மன்னிக்க மாட்டார். பாக்கிஸ்தான் முற்றிலும் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை டிரம்ப் பாகிஸ்தானை மன்னிக்கவே மாட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை